இன்று மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் இன்று (ஜன.,18) அறிவிக்க உள்ளது. 2013-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி பதவியேற்ற மேகாலயா சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.
2013-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பதவியேற்ற நாகாலாந்து சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதம் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2013-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி பதவியேற்ற திரிபுரா மாநில சட்டசபையின் பதவி காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. சுமார் 60 இடங்களைக் கொண்ட மூன்று மாநில சட்டசபையின் பதவிகாலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அதற்கு முன் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இதனால் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று பிற்பகல் 12 மணியளவில் வெளியிட உள்ளது.
The Election Commission to announce election schedule for legislative assemblies of Meghalaya, Tripura & Nagaland. pic.twitter.com/E90e3AM2Ky
— ANI (@ANI) January 18, 2018