கல்வி, சுகாதார வசதிகள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு!

Last Updated : May 19, 2017, 03:34 PM IST
கல்வி, சுகாதார வசதிகள் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு! title=

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியிலிருந்து கல்வி மற்றும் சுகாதார துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்த உள்ளதால் எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று ஸ்ரீநகரில் நடைப்பெற்றது.

இதில் மொத்தம் 1211 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 81% பொருட்களுக்கு 18% வரை வரி விதிக்கப்பட உள்ளது. 

அரிசி, பருப்பு, பருப்பு போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.,யில் இருந்து விலக்க அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டியிலிருந்து கல்வி மற்றும் சுகாதார துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வியும், சுகாதாரமும் சேவை துறைகள் என்பதால் அவைகளுக்கு விலக்க அளிக்க வேண்டும் என ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் பல சேவை துறைகளுக்கு பயன்படும் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் மீதான வரி விகிதம் இன்னும் முடிக்கப்படவில்லை. அதன்படி ஜிஎஸ்டி கவுன்சில் ஜூன் 3-ம் தேதி  அன்று மீண்டும் நடைபெற உள்ளது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி நுகர்வோருக்கு ஏற்ற வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

Trending News