ரூபாய் 2000 நோட்டு வாபஸ் எதிரொலி: கோவில் நன்கொடைகளும் ஆடம்பர செலவும் அதிகரிக்கும்

2000 Rupees Notes Ban VS GDP: 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு, நுகர்வை ஊக்குவிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2023, 08:10 PM IST
  • ரிசர்வ் வங்கியின் 2000 ரூபாய் நோட்டு வாபஸ் முடிவு
  • மத அமைப்புகளுக்கு நன்கொடைகள் கொடுப்பது அதிகரிக்கும்
  • கருப்புப் பணமாக முடங்கியுள்ளதா 2000 ரூபாய் நோட்டுகள்?
ரூபாய் 2000 நோட்டு வாபஸ் எதிரொலி: கோவில் நன்கொடைகளும் ஆடம்பர செலவும் அதிகரிக்கும் title=

நியூடெல்லி: ரிசர்வ் வங்கியின் நோட்டுகளை வாபஸ் பெறும் நடவடிக்கையால் கோவில்கள் மற்றும் பிற மத நிறுவனங்களுக்கு நன்கொடைகள் கொடுப்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக எஸ்பிஐ பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இது தவிர, நீடித்து நிலைத்திருக்கும் நுகர்வுப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் வாங்குவதும் ஊக்கம் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்பது நாட்டின் பொருளாதாரச் செயல்திறனை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் பணமதிப்பை ஜிடிபி குறிக்கிறது.

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் முடிவு, நுகர்வை ஊக்குவிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.5 சதவீதத்திற்கு மேல் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என அனுமானிக்கிறது. இந்த மதிப்பீடு திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 8.1 சதவீதமாகவும், ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India) பொருளாதார வல்லுநர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | RBI அளித்த ஜாக்பாட் செய்தி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. மக்களுக்கு நிம்மதி!!

எஸ்பிஐ அறிக்கை

ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் விளைவுகளால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 8.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது. 2023-24 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் மதிப்பீடான 6.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என்ற மதிப்பீட்டை இது உறுதிப்படுத்துகிறது. இதில், 85 சதவீத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட்களாக வந்த நிலையில், 15 சதவீத நோட்டுகள் வங்கி கவுன்டர்களில் வேறு நோட்டுகளாக மாற்றப்பட்டன.

2000 ரூபாய் நோட்டுகள்
மொத்தம் ரூ.3.08 லட்சம் கோடி டெபாசிட்களாக ரூ.2,000 பணத்தாள்களாக திரும்ப வரும் என்று எதிர்பார்ப்பதாக, எஸ்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் சுமார் ரூ.92,000 கோடி சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும், அதில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ.55,000 கோடி பணம் திரும்பப் பெற்ற பிறகு செலவினங்களுக்காக மக்களைச் சென்றடையும்.

ஸ்டேட் பாங்கின் இந்த அறிக்கையின்படி, நுகர்வு பெருக்கத்தின் காரணமாக, இந்த மொத்த அதிகரிப்பு நீண்ட கால அடிப்படையில் ரூ.1.83 லட்சம் கோடியாக இருக்கும்.

மேலும் படிக்க | எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்துள்ளது தெரியுமா?

மத்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கோவில்கள் மற்றும் பிற மத நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளும் அதிகரிக்கும் என எஸ்பிஐ பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இது தவிர, நீடித்து நிலைத்திருக்கும் நுகர்வுப் பொருட்கள் மற்றும் அலங்கார மரச்சாமான்கள் வாங்குவதும் ஊக்குவிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். 

ஏனெனில் ரொக்கப் பணமாக வைத்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நல்ல பணமாக இருக்கும் என அவர்கள் கருதுவில்லை என்று புரிந்துக் கொள்ளப்படுகிறது, 2000 ரூபாய் நோட்டுகளில், கருப்பு பணம் அதிகமாக இருக்கும் என்ற அனுமானங்களே இந்த நுகர்வுப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவதற்கான காரணமாக இருக்கலாம்.

மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டுகளை எல்லாம் பத்திரமா இருக்கு! புரளியைக் கிளப்பாதீங்க! எச்சரிக்கும் RBI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News