வங்கக்கடலில் அமைந்திருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். முதல் நிலநடுக்கம் 11:05:42 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவானது. அடுத்ததாக பிற்பகல் 1.55 மணிக்கு 4.5 என்ற அளவுகோலில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் இருக்கும் சமயத்தில் அடுத்ததாக மூன்றாவது நிலநடுக்கம் 2.06 மணிக்கு 4.6 ஆக பதிவானது.
மேலும் படிக்க | அந்தமானில் ஒரே நாளில் 6வது நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
இதைத் தொடர்ந்து 2.37 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ஆகவும் அடுத்து 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகியுள்ளது. 3.02 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 256 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 3.25 மணிக்கு போர்ட் பிளேயரில் இருந்து தென்கிழக்கே 205 கிமீ தொலைவில் கடலில் 10 கிமீ ஆழத்தில் 4.6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7 ஆவது முறையாக பிற்பகல் 3.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.8 ஆகப் பதிவானது.
அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டு மீனவர்களுக்கும், கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் அரசு சார்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் ஒரே நாளில் 7 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த லாலு பிரசாத் யாதவ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR