பிரபல நகை வியாபாரி, நிரவ் மோடியும், அவரது மாமாவும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன அதிபருமான, மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், வங்கி அதிகாரிகள் துணையுடன், 12,600 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.
இதையடுத்து, இருவரும், தற்போது, வெளிநாடுகளுக்கு தப்பியோடியதை அடுத்து, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, அவர்களுடன் தொடர்புடைய தனி நபர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட, 64 பேர், தங்கள் சொத்துக்களை விற்க, என்.சி.எல்.டி., எனப்படும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.
மத்திய கார்ப்பரேட் கம்பெனிகள் துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.