கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் முக்கியமான துறை விமான போக்குவரத்து துறை தான். தற்போது கொரோனா காலத்தில் இருந்து மீண்ட பிறகு, அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. இந்த வரிசையில், உள்நாட்டு விமானப் பயணத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இங்கேயும் நிலைமை முன்பை விட சிறப்பாக உள்ளது. தற்போது விமான நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விமான பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் பயணிகள் விமானங்களைத் தவறவிடும் நிலை கூட ஏற்பட்டுவருகிறது. உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 116 லட்சத்தை எட்டியுள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு நவம்பரில், இந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. உள்நாட்டு விமானப் பயணத்தில் என்ன சிறப்பான மாற்றங்கள் காணப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாட்டில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நவம்பர் மாதத்தில் 11.06 சதவீதம் அதிகரித்து 116 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த தகவல் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) சமீபத்திய தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளது. நவம்பர் 2021ல் உள்நாட்டு விமானங்களில் 105.16 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதே நேரத்தில், நவம்பர் 2022 இல், உள்நாட்டு விமானங்களின் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 116.79 லட்சமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 114.07 லட்சமாக இருந்தது.
Passengers carried by domestic airlines during January- November 2022 were 1105.10 lakhs as against 726.11 lakhs during the corresponding period of previous year thereby registering annual growth of 52.19% and monthly growth of 11.06%: DGCA pic.twitter.com/a9PrmX4Dxy
— ANI (@ANI) December 19, 2022
மேலும் படிக்க | மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள் வாங்க ஜோதிராதித்ய சிந்தியா வழங்கிய டிப்ஸ்!
கோவிட்-19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, இப்போது மறுமலர்ச்சிப் பாதையில் உள்ளது. இப்போது ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு லட்சம் பேர் உள்நாட்டு விமானத்தில் பயணிக்கின்றனர். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இண்டிகோவின் பங்கு நவம்பர் மாதத்தில் 55.7 சதவீதமாக இருந்தது. இந்த மாதத்தில் இண்டிகோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 65.01 லட்சமாக இருந்தது.
நவம்பர் மாதத்தில் ஏர் இந்தியாவின் சந்தைப் பங்கு 9.1 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், ஏர் ஏசியா இந்தியாவின் சந்தைப் பங்கு 7.6 சதவீதமாகவும், GoFirst மற்றும் SpiceJet இரண்டும் 7.5-7.5 சதவீதமாகவும் இருந்தது.
மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் - அதிரடி அறிவிப்பு