கொழும்பு-வாரணாசி இடையே நேரடி விமான சேவை: மோடி

Last Updated : May 12, 2017, 01:50 PM IST
கொழும்பு-வாரணாசி இடையே நேரடி விமான சேவை: மோடி title=

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார். இன்று கொழும்பு பண்டார நாயக ஹாலில் சர்வதேச புத்தபூர்ணிமா கொண்டாட்டம் நடைபெற்றது.

அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வெளிநாட்டு தூதர்கள், அரசியல் பிரமுகர்கள், சர்வதேச புத்தமத தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி விழாவில் பேசியதாவது:-

நான் புத்தர் அவதரித்த இந்திய மண்ணில் இருந்து 125 கோடி மக்களின் வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்திய புத்தர் அவதரித்த பூமி.

இந்தியாவின் கொள்கை வேரை இலங்கை கொண்டுள்ளது. நமது பிராந்தியம் மதிப்பிட முடியாத புத்தரையும், அவரது போதனைகளையும் உலகத்துக்கு பரிசாக வழங்கியுள்ளது. வெறுப்பும், வன்முறையும் உலக அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இரு நாடுகளும் வன்முறையை வெறுப்பதில் ஒன்றாக இருக்கிறோம். நாம் நண்பர்களாக உள்ளோம். 22 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் கூறிய அறிவுரை தற்போது 21-ம் நூற்றாண்டிலும் நமக்கு பொருத்தமானதாக உள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு முன்னோக்கி செல்கிறது.

இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா முழு உதவி செய்யும். வருகிற ஆகஸ்டு மாதத்தில் கொழும்பு- வாரணாசி இடையே ஏர் இந்தியா விமான சேவை தொடங்க உள்ளது. இது இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Trending News