ஜன்தன் யோஜனா வங்கி கணக்கில் ரூ.64,250 கோடி டெபாசிட்

புதுடெல்லி: ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

Last Updated : Nov 26, 2016, 09:11 AM IST
ஜன்தன் யோஜனா வங்கி கணக்கில் ரூ.64,250 கோடி டெபாசிட்  title=

டெல்லி: புதுடெல்லி: ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதற்கு பதிலாக புதியதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சில்லரை தட்டுப்பாடும் நிலவி வருகிறது. 
 
இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறுகையில், கடந்த நவம்பர் 16-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட 25.58 கோடி வங்கிக்கணக்கில் ரூ.64,252.15 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 3.79 கோடி வங்கிக்கணக்கு உள்ளது. இதில் ரூ.10,670.62 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. அங்கு மொத்தம் 2.44 கோடி வங்கிக்கணக்கு உள்ளது. அங்கு ரூ.7,822.44 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. 1.89 கோடி வங்கிக்கணக்கு உள்ளது. ரூ.5345.57 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் 2.62 கோடி வங்கிக்கணக்கு உள்ளது அதில் ரூ.4,912.79கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

மொத்தமுள்ள 25.58 கோடி வங்கிக்கணக்கில், 5,98 கோடி (23,02 சதவீதம்) வங்கிக்கணக்குகளில் பணம் ஏதுமில்லை. இந்த வங்கிக்கணக்குகளில் ரூ.1 அல்லது ரூ.2 டிபாசிட் செய்ய வேண்டும் என பொதுத்துறை வங்கிகள் வலியுறுத்தவில்லை என்றார்.

இதனால், ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஜன்தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு, அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1.50 லட்சம் செலுத்தும் என்ற தகவல் பரவி வருகிறது. அது போன்ற திட்டங்கள் வந்தால், இவர்கள் பாதிக்கப்படலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Trending News