காற்று மாசுடன் கடும் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை ரத்து.....
வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையும் இதே நிலை நீடித்தது.
காற்று மாசுடன் கடும் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 5:30 மணி முதல் 7 மணி வரைக்குள்ளான விமானங்களின் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தைபோன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது.
Delhi's air quality worsens, fog disrupts air and rail traffic
Read @ANI Story| https://t.co/Y2KnZumYBn pic.twitter.com/Lbjm2swKbr
— ANI Digital (@ani_digital) January 18, 2019
இன்று காலை டெல்லி மாநகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவானது. டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.