"அயன் சூர்யாவை" மிஞ்சிய புத்திசாளி! வைரலான வீடியோ

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தனது தலையில் தங்க பேஸ்ட்டை ஒட்டவைத்து கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2022, 05:05 PM IST
  • ஆனால் அவரது தலையில் முன்பக்க முடியின் நிறம், தன்மை வேறு மாதிரி இருந்துள்ளது பின் பக்கம் வேறு மாதிரி இருந்துள்ளது.
  • அந்த நபர் முன்னுக்கு பின் முறணாக பதிலளித்தார்.
"அயன் சூர்யாவை" மிஞ்சிய புத்திசாளி! வைரலான வீடியோ title=

அபுதாபியில் இருந்து புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து தரையிறங்கியது.

அந்த விமானத்தில் வந்து இறங்கிய ஒருவர் சந்தேகப் படும்படி இருந்தார். அவரிடம் சொதனை செய்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது பைகள், சூட்கேஸ்கள் என எதிலும் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரது தலையில் முன்பக்க முடியின் நிறம், தன்மை வேறு மாதிரி இருந்துள்ளது பின் பக்கம் வேறு மாதிரி இருந்துள்ளது.

இதை கவனித்த போலீஸார் அது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முறணாக பதிலளித்தார்.

இதனால் அவரது தலையை தொட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். திட-திரவியம் போன்று ஏதோ முடிக்கு பின்னால் இருப்பது போல தெரிந்தது. இதையடுத்து முடியை விலக்கி பார்த்தபோது அதில் செயற்கை முடி உள்ளங்கையளவு விக் போல ஒட்டப்பட்டுருந்தது.

அதனை உரித்து பார்த்தபோது உள்ளே ஒரு பாக்கெட்டில் தங்கப் பேஸ்ட் இருந்துள்ளது. 

பின்னர் நடத்திய விசாரணையில் இந்த தங்கத்தை கடத்துவதற்காக தலையின் பாதியில் மொட்டையடித்து, அதில் தங்க பேஸ்ட்டை ஒட்ட வைத்து அதன் மீது விக்கை ஒட்டி ஏமாற்ற முயன்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

இந்த தங்கத்தின் எடை 630.45 கிராம் என்றும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.30.55 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News