4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை விடுவிக்க டெல்லி அரசு முடிவு...

தேவையான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை பூர்த்தி செய்துள்ளதால் கிட்டத்தட்ட 4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 

Last Updated : May 6, 2020, 07:52 PM IST
4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை விடுவிக்க டெல்லி அரசு முடிவு... title=

தேவையான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை பூர்த்தி செய்துள்ளதால் கிட்டத்தட்ட 4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. 

எனினும், மார்கஸ் விசாரணைக்குத் தேவையானவர்கள் டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில்., காவல்துறை விசாரணையில் தேவையில்லாத ஜமாஅத் உறுப்பினர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மார்ச் கடைசி வாரத்தில் நிஜாமுதீன் மார்க்கஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான தப்லீஜி ஜமாஅத் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், இந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் நாவலுக்கு பாதிக்கப்பட்டு இருப்பாதக கண்டறியப்பட்டனர். மீதமுள்ள, 4,000 பேர் டெல்லியில் உள்ள பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது ஜமாஅத் உறுப்பினர்களில் சுமார் 900 பேர் டெல்லியில் வசிப்பவர்கள் வீட்டிற்கு செல்லலாம், மீதமுள்ளவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டெல்லி உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சத்யேந்தர் ஜெயின், தனது உத்தரவில், தப்லீஹி உறுப்பினர்களின் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் குடியுரிமை ஆணையர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த செயல்முறை ஏற்கனவே நடந்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending News