Delhi Assembly Election Results:அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி

டெல்லியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம். இந்தமுறை யார் ஆட்சி கட்டலில் ஏறுவது..?

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 11, 2020, 05:21 PM IST
Delhi Assembly Election Results:அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி title=

13:33 11-02-2020
நான் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். இந்த தோல்வி மூலம் எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணர்த்தியது. ஆனால் காங்கிரஸைக் கட்டியெழுப்ப வேண்டிய சூழல் இருக்கிறது, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றம் இல்லை. நாங்கள் தொடர்ந்து டெல்லிக்கு வேலை செய்வோம். ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது என்பது இதுவரை கிடைத்த முடிவுகளிலிருந்து தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக கெஜ்ரிவாலை வாழ்த்துகிறோம்.

- -ரந்தீப் சுர்ஜேவால்


13:31 11-02-2020
தேர்தல் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் போராடுவதை நான் விட்டுவிடவில்லை. இந்து-முஸ்லீம் வாக்குகள் துருவப்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் இப்போது புதிய முகங்களுடன் தயாராக வேண்டும்.

- காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா


13:28 11-02-2020
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி சஞ்சய் சிங் வாழ்த்து தெரிவித்தார்.


12:42 11-02-2020
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சித் தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை குறித்து தனது சகாக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.


12:35 11-02-2020
பிப்ரவரி 8 ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானின் போட்டியாக இருக்கும் என்று பாஜக கூறியிருந்தது. இன்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.


12:27 11-02-2020
காங்கிரசின் செயல்திறன் குறித்து மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறுகையில், டெல்லியில் காங்கிரசின் நிலைமை எங்களுக்கு முன்பே தெரியும். பெரிய வெற்றி பெறுவோம் எனக்கூறிக் கொண்டிருந்த பாஜகவுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் கேள்வி.

 


12:18 11-02-2020
கட்சியின் செயல்திறனுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இதன் பின்னணியில் உள்ள காரணங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் துருவமுனைப்பு அரசியல் காரணமாக எங்கள் வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது

- சுபாஷ் சோப்ரா, டெல்லி காங்கிரஸ் தலைவர்


12:15 11-02-2020
இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார்.

 

 


11:53 11-02-2020
மாடல் டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.


11:52 11-02-2020
மும்பையில் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள்.


11:28 11-02-2020
தேர்தல் ஆணைய தரவுகளின்படி, ஆம் ஆத்மி கட்சி 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, பாஜக 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


11:24 11-02-2020
சுல்தான்புரி மஜ்ரா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முகேஷ் குமார் அஹ்லவத், திலக்நகரில் இருந்து ஜர்னைல் சிங், திமார்பூரிலிருந்து திலீப் பாண்டே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்கள். துக்ளகாபாத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியும், திரிநகரில் இருந்து பாஜகவைச் சேர்ந்த திலக் ராம் குப்தாவும் முன்னிலை வகிக்கின்றனர். விகாஸ்பூரியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மஹிந்திரா யாதவ், வஜீர்பூரைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் ராஜேஷ் குப்தா முன்னிலை.


11:22 11-02-2020
ரோஹினியைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா 1739 வாக்குகள், சங்கம் விஹாரைச் சேர்ந்த தினேஷ் மோகானியா 10209 வாக்குகள் முன்னிலையில், சகுர்பஸ்தியைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 51 வாக்குகள், சதாபர் பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் சோம் தத், சீமாபுரியிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜேந்திரா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்.


11:06 11-02-2020
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், டெல்லியில் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சர் ஆவதை நோக்கி முடிவுகள் நகர்கிறார். இனியாவது அவர் ஒரு முதிர்ச்சி அரசியலை செய்ய வேண்டும் என்று கூறினார்.


11:03 11-02-2020
ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரசுக்கு எந்த தொகுதியிலும் முன்னிலை இல்லை.

Delhi Assembly Election Results


10:54 11-02-2020
தேர்தல் ஆணைய வலைத்தளத்தின்படி, 68 இடங்களின் முடிவுகள் ஏறக்குறைய வந்துவிட்டன. ஆம் ஆத்மி கட்சி 50 இடங்களில் முன்னிலையில் உள்ளது, பாரதிய ஜனதா 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


10:52 11-02-2020
இதுவரை வெளியான முடிவுகள் குறித்து தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், தற்போதைய போக்குகள், எங்கள் நிலைமை தொடர்ந்து சிறப்பாக வருகிறது. மேலும் சுற்றுகளின் முடிவுகள் எண்ணும்போது நிலைமை மேலும் எங்களுக்கு சாதகமாக இருக்கும். பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை.


10:36 11-02-2020
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சகுர்பஸ்தியில் சுகாதார அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான சத்யேந்திர ஜெயின் பின்தங்கியிருக்கிறார்.


10:34 11-02-2020
டெல்லி துணை முதல்வர் ஆம் ஆத்மி கட்சியின் மனிஷ் சிசோடியா பட்பர்கஞ்சை 112 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.


10:07 11-02-2020
டெல்லி தேர்தல் முடிவு: தேர்தல் ஆணையத்தின்படி, ஆம் ஆத்மி கட்சி 30 இடங்களிலும், பாஜக 16 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் புது தில்லி தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.


09:33 11-02-2020
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி 7, பாஜக 6 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


09:22 11-02-2020
பாஜகவின் வேட்பாளர் ரேகா ஷாலிமார் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார், விஸ்வாஸ் நகரைச் சேர்ந்த ஓ.பி. சர்மா, பிஜ்வாசனைச் சேர்ந்த சத்யபிரகாஷ், கோண்டாவைச் சேர்ந்த அஜய் மகாவர், முஸ்தபாபாத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் பிரதான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


09:11 11-02-2020
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், இப்போது இறுதி முடிவுகளுக்காக காத்திருங்கள், நாங்கள் ஒரு பெரிய வெற்றியைப் பெறப்போகிறோம் என்றார்.

 

 


09:06 11-02-2020
திரிலோக்புரி தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறுகையில், மொத்தம் 13 சுற்று எண்ணிக்கைகள் நடைபெற வேண்டும். தற்போது தபால் வாக்குகள் கணக்கிடப்படுகின்றன. முதல் சுற்றின் எண்ணிக்கை 9 மணிக்குள் மணிக்குள் நிறைவடையும் என்றார்.

 

 


09:00 11-02-2020
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்ட கபில் மிஸ்ரா மாடல் டவுன் தொகுதியில் பின்னடைவு. அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் சார்பில் ஆம் ஆத்மிக்கு எதிராக களம் கண்ட அல்கா லம்பா பின்னடைவை சந்தித்து வருகிறார்.


08:56 11-02-2020
ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களில் முன்னிலை வகித்தது, பாஜக 13 இடங்களிலிருந்து 16 இடங்களாக உயர்ந்தது.


08:51 11-02-2020
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சகுர்பஸ்தியில் சுகாதார அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான சத்யேந்திர ஜெயின் முன்னிலை வகிக்கிறார்


08:44 11-02-2020
டெல்லி தேர்தல்: புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை வகிக்கிறார், பட்பர்கஞ்சில் இருந்து துணை முதலவர் மணீஷ் சிசோடியா முன்னிலை வகிக்கிறார்.


08:39 11-02-2020
ஆரம்ப சுற்றுகளில் ஆம் ஆத்மி கட்சி 50 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் பின்தங்கி உள்ளது. 


08:31 11-02-2020
டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரசின் அல்கா லம்பா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்தர் சிங் லவ்லியும் பின் தங்கியுள்ளார்கள்.


08:26 11-02-2020
ஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி... அடுத்த இடத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியும் தனது கணக்கை தொடங்கியுள்ளது.


08:24 11-02-2020
70 இடங்களின் நிலவரம்.... ஆம் ஆத்மி 53, பாஜக 16, காங்கிரஸ் 1 இடங்கள் முன்னிலையில் உள்ளன.


08:21 11-02-2020
51 இடங்களின் நிலவரம்.... ஆம் ஆத்மி 34, பாஜக 15, காங்கிரஸ் 2 இடங்கள் முன்னிலையில் உள்ளன.


08:20 11-02-2020
டெல்லியில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பாஜக 13, ஆம் ஆத்மி கட்சி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரசின் ஆரோன் யூசுப் பல்லிமாரனில் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.


08:16 11-02-2020
43 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 10 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.


08:11 11-02-2020
24 இடங்களில் ஆம் ஆத்மி 17, பாஜக 7 இடங்கள் முன்னிலையில் உள்ளன


08:10 11-02-2020
தபாலில் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை தொடங்கியது. முதல் போக்கு முடிவு சிறிது நேரத்தில் வெளிவரும்.


08:07 11-02-2020
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, "நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். ஏனென்றால் நாங்கள் டெல்லி மக்களுக்காக 5 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளோம் என்றார்.

 


08:06 11-02-2020
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தேர்தல் முடிவுக்கு முன்னர் தனது வீட்டில் பிரார்த்தனை செய்தார்.

 


08:04 11-02-2020
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "நான் பதற்றமடையவில்லை, டெல்லியில் பாஜக அரசு உருவாகும் என்று நான் நம்புகிறேன். இன்று பாஜகவுக்கு நல்ல நாளாக இருக்கும். பாஜக 55 இடங்களைக் கூட வென்றாலும் ஆச்சரியமில்லை எனக் கூறியுள்ளார்.

 

 


புதுடெல்லி: பிப்ரவரி 8 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 (#DelhiResultOnZee) இன் முடிவுகள் மற்றும் போக்குகள் காலை 8 மணி முதல் வரத் தொடங்கும். பிப்ரவரி 8 ஆம் தேதி, தலைநகரில் உள்ள அனைத்து இடங்களிலும் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. வெளியான அனைத்து கருத்துக் கணிப்புகளிலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஒரு முழுமையான பெரும்பான்மையைப் பெறும் என்று கூறப்பட்டு உள்ளது. இருப்பினும், 22 ஆண்டுகளாக டெல்லியில் அதிகார வறட்சியை எதிர்கொண்டுள்ள பாஜக, இந்த முறை மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் கட்சி தனது முழு பலத்தையும் அளித்திருந்தது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி டெல்லி மக்களைக் கவரும் வகையில் தனது அறிக்கையில் நீண்ட மற்றும் பரந்த வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் கருத்துக் கணிப்புகளின் படி, இந்த முறையும் காங்கிரஸ் கட்சி தனது கணக்கைத் திறக்காது என்று கூறியுள்ளது.

Trending News