டென்மார்க் பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேருக்கும் ஆயுள் தண்டனை

Last Updated : Jun 10, 2016, 04:51 PM IST
டென்மார்க் பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேருக்கும் ஆயுள் தண்டனை title=

டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி சுற்றுலா வந்திருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம். டென்மார்க் பெண்ணை கற்பழித்த 5 பேர் குற்றவாளிகள் என கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் குற்றவாளிகள் 5 பேருக்கும்  ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்படும் போது குற்றவாளிகள் ஐந்து பெரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்பு உள்ள மேலும் 3 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மீதான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒன்பதாவது குற்றவாளி ஒருவர் வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News