புதுடெல்லி: கியார் சூறாவளி அடுத்த 24 மணி நேரத்தில் "சூப்பர் சூறாவளி புயலில்" இருந்து "மிக கடுமையான சூறாவளி புயலாக" பலவீனமடைய வாய்ப்புள்ளது என்று இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அக்டோபர் 31 காலைக்குள் இது "கடுமையான சூறாவளி புயலாக" மேலும் பலவீனமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி மும்பைக்கு (Maharashtra) மேற்கே 980 கி.மீ தொலைவிலும், சலாலா (Oman) கிழக்கு - வடகிழக்கில் 1020 கி.மீ தொலைவிலும், மசிராவின் (Oman) கிழக் கு -தென்கிழக்கில் 510 கி.மீ தொலைவிலும் காலை 5.30 மணிக்கு (IST) மையம் கொண்டிருந்தது. அக்டோபர் 30 மாலை வரை மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் மேற்கு - தென்மேற்கு திசையில் திரும்பவும், அடுத்த மூன்று நாட்களில் தெற்கு ஓமான் - ஏமன் (Oman-Yemen) கடற்கரையிலிருந்து ஏடன் வளைகுடாவை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொமொரின் (Comorin) பகுதி மற்றும் அதனுடன் இணைந்த பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் (Indian ocean) குறைந்தழுத்த பகுதி உள்ளது. இந்த சூறாவளி சுழற்சி நடுப்பகுதி வெப்பமண்டல அளவுகள் வரை நீண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் அருகிலுள்ள லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் குறைந்தபட்ச அழுத்தம் இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு (Tamilnadu), கேரளா (Kerala), ராயலசீமா (Rayalaseema ) மற்றும் தெற்கு உள் கர்நாடகா (South Interior Karnataka) மற்றும் லட்சத்தீவில் (Lakshadweep) அக்டோபர் 29 மற்றும் 31 ஆம் தேதிகளில் மிக அதிக மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.