மாணவி ஒருவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ஷிவ் நாடார் பல்கலைகழக மாணவர்!

ஷிவ் நாடார் பல்கலைகழக  மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2023, 06:48 PM IST
  • ஷிவ் நாடார் பல்கலைக்கழக மாணவர், மாணவி ஒருவரை சுட்டுக் கொன்றார்
  • குற்றம் சாட்டப்பட்ட மாணவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி ஒருவரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ஷிவ் நாடார் பல்கலைகழக மாணவர்! title=

ஷிவ் நாடார் பல்கலைகழக  மாணவர் ஒருவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, தானும் துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி அருகே உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர், மாணவியை சுட்டுக் கொன்றார். இதையடுத்து அவரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கான்பூரில் வசிப்பவர் மற்றும் மாணவர் அம்ரோஹாவைச் சேர்ந்தவர். உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட மாணவர் மற்றும் மாணவி இருவரும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்று கூறப்படுகிறது. மாணவி சமூகவியல் படித்து வந்தார். அந்த மாணவி நேஹா சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வசிப்பவர். குற்றம் சாட்டப்பட்ட மாணவர் அனுஜ் அம்ரோஹாவில் வசிப்பவர்.

தகவலின்படி, இந்த சம்பவத்திற்கு முன், இருவரும் தங்கள் தங்கும் விடுதிகளில் இருந்து சாப்பாட்டு அறைக்கு அருகில் வந்துள்ளனர். அங்கு இருவரும் 5 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு இருவரும் கட்டிப்பிடித்தபடி இருந்துள்ளனர். அப்போது வாக்குவாதம் நடந்ததா அல்லது என்ன நடந்தது எனத் தெரியவில்லை. பின்னர் மாணவன் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தனது விடுதி அறைக்கு சென்றுள்ளார். தனது விடுதியின் அறை எண் 328-க்கு சென்ற மாணவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாணவியும் மாணவரும் கிரேட்டர் நொய்டாவின் யதர்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மேலும் படிக்க | கடனை அடைக்க 4 வயது மகளை அடமானம் வைத்த குடிகார தந்தை!

சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்த மாணவர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் காதலும் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. எனினும், இருவருக்கும் இடையே சில நாட்களாக சில பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா நகரில் 2011 ஆம் ஆண்டு  சிவ நாடார் பல்கலைக்கழகம் (Shiv Nadar University) நிறுவப்பட்டது. இது தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் HCL டெக்னாலஜிஸ் நிறுவனரும் தலைவருமான சிவ நாடார் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  கல்வி நிறுவனமான ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையிலும் செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகர் விஜய்? போஸ்டர்களால் பரபரப்பு..!

மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News