கடனை அடைக்க தனது சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண் ரூ.16 லட்சத்தை இழந்த சோகம்!

ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த மாணவி ஒருவர் தனது சிறுநீரகத்தை ரூ.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2022, 07:29 PM IST
  • ஹைதராபாத்தில் ஒரு பெண் கடனை அடைப்பதற்காக தனது சிறுநீரகத்தை விற்க முயன்றார்.
  • உதவி கோரி அந்த பெண் காவல் நிலையத்தை அணுகியதை அடுத்து இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.
  • நர்சிங் படிக்கும் மாணவி, தனது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணம் எடுத்துள்ளார்.
கடனை அடைக்க தனது சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண் ரூ.16 லட்சத்தை இழந்த சோகம்! title=

நிதி மோசடி தொடர்பான மற்றொரு அதிர்ச்சிகரமானசம்பவத்தில், ஹைதராபாத்தில் ஒரு பெண் கடனை அடைப்பதற்காக தனது சிறுநீரகத்தை விற்க முயன்றபோது மோசடி செய்பவர்களிடம் ரூ.16 லட்சத்தை இழந்தார். உதவி கோரி அந்த பெண் காவல் நிலையத்தை அணுகியதை அடுத்து இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பெண் நர்ஸிங்  மாணவி என்றும், அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகையைத் திரும்பத் தன் தந்தையின் கணக்கில் டெபாசிட் செய்ய விரும்பிய பெண், வேறு வருமானம் இல்லாததால், தன் சிறுநீரகங்களில் ஒன்றை விற்க முடிவு செய்தாள்.

மாணவி ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர். தனது சிறுநீரகத்தை ரூ.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக அப்பெண் ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சிறுநீரகம் தேவைப்படுபவர்களுக்குப் பதிலாக, சைபர் மோசடி செய்பவர்கள் அவரது செய்தியைக் பார்த்து, அவர் வழங்கிய விவரங்களைப் பயன்படுத்தி அவளைத் தொடர்பு கொண்டனர். சிறுநீரகத்திற்காக 3 கோடி ரூபாயை மோசடி செய்தவர்கள் வழங்குவதாக கூறியுள்ளனர். சிறுமி அவர்களை நம்பி அவர்களின் வலையில் விழுந்தாள்.

பிரவீன் ராஜ் என்ற நபர் சமூக ஊடகங்கள் மூலம் அவளைத் தொடர்பு கொண்டு, சிறுநீரகத்தை அகற்ற அறுவை சிகிச்சைக்கு முன் 50% பணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்வதாகத் தெரிவித்தார். ஆனால், அந்த பெண் வரி மற்றும் போலீஸ் சரிபார்ப்பு செலவுக்காக ரூ.16 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது: உச்சநீதிமன்றம்

அந்த பெண்ணை நம்ப வைக்க, மோசடி செய்தவர்கள், சிட்டி வங்கியில் கணக்கு தொடங்கி, 3 கோடி ரூபாயை மாற்றியுள்ளனர். இதைப் பார்த்த அந்த பெண், 16 லட்சத்தை மோசடி நபர்களிடம் மாற்றி 50 சதவீத முன்பணத்தை கேட்டுள்ளார்.

மோசடி செய்பவர்கள் ஒரு டெல்லி முகவரியைப் பகிர்ந்துகொண்டு அங்கிருந்து பணம் வசூலித்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள். சிறுமி அந்த முகவரியை அடைந்தபோது. அது போலியானது என தெரியவந்தது. அதன் பிறகும் சிறுமி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவிக்கவில்லை.

அவரது தந்தை பரிவர்த்தனைகளைப் பற்றி அறிந்ததும், அவர் தனது மகளை வீட்டிற்குத் திரும்ப அழைத்தார். ஆனால் அவள் ஹைதராபாத் விடுதியிலிருந்து  ஓடிவிட்டாள். பின்னர் அவரது தந்தையின் புகாரின் பேரில் சிறுமியை அவரது நண்பரின் வீட்டில் போலீசார் கண்டுபிடித்தனர்.

மேலும் படிக்க | Bilkis Bano: பில்கிஸ் பானோ மனு விசாரணையில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News