இரும்பு தகடு மூலம் ATM-லிருந்து பணத்தை திருடிய பலே திருடர்கள்! வளைத்து பிடித்த போலீஸார்!

ஏடிஎம்மில் பொதுவாக நாம் நம்மிடம் இருக்கும் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுப்போம். ஆனால், இங்கே பலே கில்லாடியான ஆசாமி ஒருவர் இரும்பு தகட்டை பயன்படுத்தி பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2022, 09:22 PM IST
  • ஏடிஎம்மில் இருந்து முறைகேடு செய்து பணம் எடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார்.
  • இயந்திரம் பழுதடைந்துவிட்டது என்று நினைத்து பணம் எடுக்க வந்தவர்கள் சென்று விடுவார்கள்.
  • நீண்ட நாட்களாக தொடரும் மோசடி.
இரும்பு தகடு மூலம் ATM-லிருந்து பணத்தை திருடிய பலே திருடர்கள்! வளைத்து பிடித்த போலீஸார்! title=

ஏடிஎம்மில் பொதுவாக நாம் நம்மிடம் இருக்கும் வங்கி அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுப்போம். ஆனால், இங்கே பலே கில்லாடியான ஆசாமி ஒருவர் இரும்பு தகட்டை பயன்படுத்தி பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் காவல்துறை ஏடிஎம்மில் பணத்தை திருடிய 3 பேரை கைது செய்யதுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி காவல் துறை அடையாள அட்டை, காவல் துறை பிக் கேப், கைத்துப்பாக்கி, காவல் துறை சின்னம் கொண்ட பொலேரோ கார் மற்றும் ஏனைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் ஏடிஎம்மில் இரும்பு தட்டை வைத்து விடுவது வழக்கம் என்று கூறிய போலீஸார் யாரேனும் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தால், இவர்கள் வைத்திருக்கும் இரும்பு தகடு காரணமாக ஏடிஎம்மில் உள்ள டிஸ்பென்சர் ஷட்டருக்குள் பணம் சிக்கிக் கொள்ளும் என்றும் போலீசார் கூறுகின்றனர். இயந்திரம் பழுதடைந்துவிட்டது என்று நினைத்து பணம் எடுக்க வந்தவர்கள் சென்று விடுவார்கள். அவர்கள் சென்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிஸ்பென்சர் ஷட்டரைத் தூக்கி, இரும்பு தகட்டை நீக்கி விட்டு பணத்தை வெளியே எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

நீண்ட நாட்களாக தொடரும் மோசடி

இந்த சம்பவங்களை நீண்ட நாட்களாக நடத்தி வந்தனர்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏடிஎம்மில் போலீஸ்காரர் போல் வேடமணிந்து உள்ளே நுழைந்து, அதில் இருந்து பணம் எடுக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரத்தை சோதனை என்ற பெயரில் நுழைந்து, பின்னர் தலைமறைவாக ஆகி விடுவார்கள். நீண்டகாலமாக இவர்கள் இவ்வாறான சம்பவங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மனைவியை அடித்து கொன்று சடலத்தை 321 கிமீ தூரம் எடுத்து சென்று எரித்த மருத்துவர்!

ஏடிஎம் முறைகேடு குறித்து வங்கி மேலாளர் அளித்த புகார்
 
ஊடக அறிக்கையின்படி, காவல்துறையின் படி, கனரா வங்கி மேலாளர் ஒருவர் தனது ஏடிஎம்மில் இருந்து முறைகேடு செய்து பணம் எடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஏடிஎம்மில் முறைகேடு செய்து பணம் எடுத்ததாக ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நடேசர் சுக்லா, மந்து பாஸ்வான் ஆகிய 3 பேரை கோட்வாலி நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. போலீஸ் வேடமணிந்து ஏ.டி.எம்.களில் சோதனை நடத்தச் சென்றதாகவும், வாய்ப்பு கிடைத்தவுடன் இரும்பு தகட்டின் உதவியுடன் பணம் எடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.

மேலும் படிக்க | கடனை அடைக்க தனது சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண் ரூ.16 லட்சத்தை இழந்த சோகம்!

மேலும் படிக்க | PAN Card Uses: பான் கார்டு எதற்கெல்லாம் தேவை? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News