கோவிட் -19: நாட்டில் ‘யாரும் பசியுடன் இருக்கக் கூடாது’ நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

நாட்டில் பரவி வரும் கொடூர நோயான கோவிட் -19 இன் தாக்கத்தை சமாளிக்க ஒரு விரிவான பொருளாதார தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார்.

Last Updated : Mar 26, 2020, 02:43 PM IST
கோவிட் -19: நாட்டில் ‘யாரும் பசியுடன் இருக்கக் கூடாது’ நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு title=

புது டெல்லி: நாட்டில் பரவி வரும் கொடூர நோயான கோவிட் -19 இன் தாக்கத்தை சமாளிக்க ஒரு விரிவான பொருளாதார தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தார்.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கொடிய வைரஸ் தொடர்பான 649 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 13 பேர் இறந்துள்ளனர். இன்று நாடு தழுவிய லாக்-டவுன் இரண்டாவது நாள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மக்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை.

மக்களின் சிரமங்களை தீர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..!!

மத்திய அரசாங்கம் ஈபிஎஃப் விதிகளை மாற்றுகிறது. இதன் கீழ் ஒரு ஊழியர் 75 சதவீத முன்கூட்டியே பிஎஃப் கணக்கிலிருந்து அல்லது மூன்று மாத சம்பளத்தை பெற முடியும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் 12 + 12 சதவீத EPF நிதியில் பங்களிப்பை செலுத்தும். 100 க்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருக்கும் 90 சதவீத ஊழியர்களுக்கு 15 ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் பெறும் இடத்தில் இது பொருந்தும்

3.5 பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் பயனடைவார்கள். 31 ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

உஜ்வாலா திட்டத்தின் கீழ், 8 மில்லியன் பெண்கள் பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும்: நிதி அமைச்சர்

அடுத்த மூன்று மாதங்களுக்கு பெண்கள் ஜன தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு ரூ .500 வழங்கப்படும். இதன் மூலம் 20 கோடி பெண்கள் பயனடைவார்கள்: நிதியமைச்சர்

முதியவர்கள், மாற்றுதிறனாளி மற்றும் விதவைகளுக்கு மூன்று மாதங்களுக்கு கூடுதலாக ரூபாய் ஆயிரம் என இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இதன்மூலம் 3 கோடி மக்களுக்கு நன்மை கிடைக்கும்: நிதி அமைச்சர்

எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ தொழிலாளர்களின் ஊதியம் ரூ .182 லிருந்து ரூ .202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

8 கோடி 70 லட்சம் விவசாயிகள் பிரதமர் கிசான் யோஜனா, கிசான் சம்மன் நிதி மூலம் பயனடைவார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் அவர்களின் வங்கிக்கணக்கில்  2 ஆயிரம் செலுத்தபடும்.

80 கோடி மக்கள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனாவின் கீழ் வருகிறது. ஒரு நபர் கூட உணவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பதே இந்த திட்டதின் சிறப்பாகும். 

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் தற்போது வழங்கப்படும் அரிசி மற்றும் கோதுமையுடன் கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படும். இது மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். இந்த கூடுதல் நன்மையுடன் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும்.

இந்த யுத்தத்தை எதிர்த்துப் போராடும் மருத்துவப் துறையில் பணியாற்றும் அவர்களுக்கு 50 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1,70000 கோடி ரூபாய் தொகுப்பை நிதியமைச்சர் அறிவித்தார்.

விவசாயிகள், எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ தொழிலாளர்கள், ஏழை விதவைகள், ஏழை ஊனமுற்றோர் மற்றும் ஏழை ஓய்வூதியம் பெறுவோர், ஜான் தன் யோஜனா, உஜ்வாலாவின் பயனாளிகள், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்கள் மற்றும் கட்டுமானத்தில் பணிபுரியும் நபர்களுக்கு பணப் பரிமாற்றம் தொடர்பான 8 முக்கிய அறிவிப்புகள்.

Trending News