தற்போது அமெரிக்காவில் பரவியிருக்கும் FLiRT வகை கொரோனா வைரஸ், இந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் மொத்தம் 91 பேர் இந்த் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பாதிப்பு ஜனவரியில் அடையாளம் காணப்பட்டன.
தற்போது, புனே, தானே, அமராவதி, அவுரங்காபாத், சோலாப்பூர், அகமதுநகர், நாசிக், லத்தூர் மற்றும் சாங்லியோன் ஆகிய இடங்களில் இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என கொரோனா பரவல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
FLiRT கோவிட் மாறுபாடு
FLiRT என அழைக்கப்படும் புதிய வகை கொரோனாவில் KP.1.1 மற்றும் KP.2 என இரு விகாரங்கள் உள்ளன. அவற்றின் பிறழ்வுகளுக்கான தொழில்நுட்பப் பெயர்களின் அடிப்படையில் இவை பெயரிடப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று "F" மற்றும் "L" எழுத்துக்களையும், மற்றொன்று "R" மற்றும் "T" எழுத்துக்களையும் கொண்டதாகும்.
FLiRT வகை வைரஸ் கோவிட் பாதிப்பை அதிகரிக்குமா?
FLiRT கோவிட் மாறுபாடு என்பது கொரோனா வைரஸின் மற்றொரு வடிவமாகும். முந்தைய வைரஸ் பதிப்புகளிலிருந்து அதன் தனித்துவமான மரபணு வேறுபட்டிருப்பதால், இது FLiRT என்ற தனித்துவமான பெயருடன் பெயரிடப்பட்டது. மாறுபாட்டின் நடத்தை மற்றும் பரவல் தொடர்பாக விஞ்ஞானிகளும், சுகாதார நிபுணர்களும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வைரஸ் வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருந்தாலும், தற்போது இந்தியாவில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். JN.1 மாறுபாட்டை விட சற்றே அதிக பாதிப்பு கொண்டிருந்தாலும், கொரோனா தடுப்பூசிகளே போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கோவிட்-19 தடுப்பூசியை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
FLiRT வகை கொரோனாவின் சில பொதுவான அறிகுறிகள்
தொண்டை வலி
மூக்கு ஒழுகுதல்
இருமல்
தலைவலி & உடல் வலி
காய்ச்சல்
மார்பில் சளில்
சோர்வு மற்றும் பலவீனம்
மூச்சுத் திணறல்
இவற்றைத் தவிர, மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
FLiRT வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் வைரஸ் பாதிப்பு ஏற்படாது. கையை சுத்தமாக வைத்துக் கொள்வது, சுகாதாரம், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி என வழக்கமான கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றினால் போதும், இவையே, நோய்த்தொற்று அபாயத்தைக் குறைத்து, வைரஸைக் கட்டுப்படுத்திவிடும்.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ