எச்சரிக்கை..கொரோனா புதிய அலை...அச்சப்படுத்தும் புள்ளிவிவரங்கள்

Covid-19: நாட்டில் கொரோனாவின் புதிய அலை வந்துவிட்டதா? இதன் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது? இன்று இதற்கான பதிலை இந்த பதிவில் நாம் தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 29, 2023, 10:38 AM IST
  • தினசரி சராசரியாக 1471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியா முழுவதும் தற்போது 10981 பேருக்கு கோவிட்-19 தொற்று.
எச்சரிக்கை..கொரோனா புதிய அலை...அச்சப்படுத்தும் புள்ளிவிவரங்கள் title=

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது, செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 1573 பேர் புதிய கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தனர். கொரோனாவின் புதிய வகை பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கோவிட் 19 மேலாண்மைக்கான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டு வாரங்களில் நோய்த்தொற்று அதிகரிப்பு குறித்து உயர் அதிகாரிகள் மாநிலங்களுக்கு எச்சரிப்பது இது மூன்றாவது முறையாகும். அதன்படி நாட்டில் கொரோனாவின் புதிய அலை உருவாகியுள்ளதா? மேலும் ஒரு புதிய அலை வந்துவிட்டால், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும்? இதற்கான பதிலை இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

புதிய கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றன, ஆனால்...
நாட்டில் கொரோனா வைரஸின் புதிய தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன, மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தின் படி, தினசரி சராசரியாக 1471 பேருக்கு புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம், ஒரு வாரத்திற்கு முன்பு இந்த எண்ணிக்கை 808 ஆக இருந்தது. அதாவது தினசரி கோவிட்-19 பாதிப்பு 82% அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | உசார்! ஏப்ரல் 1 முதல் UPI மூலம் பணம் செலுத்தினால் வரி! வந்தது புதிய விதி!

சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் தற்போது 10981 பேர் இன்னுமும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுளளனர். அதேசமயம், மே 2021 இல் நாட்டில் இரண்டாவது அலையின் போது, ​​​​கொரோனா அதன் உச்சத்தில் இருந்தபோது, ​​​​37.5 லட்சம் பேர் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன், கோவிட் 19 இன் வாராந்திர தொற்றின் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில், தினசரி சராசரியாக 100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை சுமார் 20 ஆயிரத்தை எட்டியது.

மேலும் படிக்க | பழைய ஓய்வூதியத்தை தேர்ந்தெடுக்க இறுதி நாள் இதுதான்! காலக்கெடு நிர்ணயம் உண்மையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News