கேரளாவில் இனி மதுக்கடையில் மது வாங்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் அதிகமான கொரோனா பாதிப்புகள் தினமும் கண்டறியப்படுகின்றன. தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புதிய கொரோனா பாதிப்பு உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவிலிருந்து (Kerala) கொரோனா நோய் மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் இருக்க பல்வேறு விதிமுறைகளும் அமல் படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் தமிழக அரசும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்திருந்தது.
கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை (Corona Restrictions) அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாடு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
ALSO READ: ஓணம் திருநாள், சுதந்திர தினத்தன்று கேரளாவில் முழு ஊரடங்கு இல்லை: கேரள அரசு
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது 72 மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே கடைகள், மார்க்கெட்டுகள், வங்கிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதிக்கப்படுவர். இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரியான அசாதாரண சூழலில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மதுக்கடைகளுக்கும் (Liquor Shops) இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மது பிரியர்களுக்கு மது வழங்கப்படும். மேலும் இந்த கட்டுப்பாடுகள் தற்காலிகமானவைதான் என்றும் சுகாதாரத் துறையை அலுவலத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓணம் பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் கேரள அரசு தடை விதித்துள்ளது.
இன்று முதல் கேரளாவில் மால்கள் திறக்கப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகை வருவதையொட்டி 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: கேரளாவைத் தொடர்ந்து இந்த தென் மாநிலத்திலும் அதிகரிக்கும் தொற்று: 3 ஆவது அலை ஆரம்பமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR