அனைவருக்குமான வளர்ச்சியை எட்ட கூட்டுறவு மாதிரியே சிறந்தது: அமித் ஷா

130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சியை எட்ட கூட்டுறவு மாதிரிதான் சிறந்தது என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2021, 06:50 AM IST
அனைவருக்குமான வளர்ச்சியை எட்ட கூட்டுறவு மாதிரியே சிறந்தது: அமித் ஷா title=

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் காந்திநகரில் நிறுவப்பட்டுள்ள 415 கோடி மதிப்பிலான  அமுல் பால் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளிட்ட சில திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். 

கூட்டுறவுத் துறை அமைச்சராகவும் உள்ள அமித ஷா  அவர் ஆற்றிய உரையில். சுமார் 130 கோடி  மக்கள் தொகை கொண்ட நம் நாட்டுக்கு எந்த வகையான பொருளாதார மாதிரி பொருத்தமானதாக இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வது என்பது கடினமான ஒரு விஷயம் தான்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது, அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு கூட்டுறவு மாதிரிதான் சிறந்தது என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்றார்.

ALSO READ | திரைப்படத்துறை மீதான விமர்சனங்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்- அண்ணாமலை

"அப்போது பலர்  அதனை கேலி செய்தனர், சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், இப்போது கூட்டறவுத் துறையில் முதல் அமைச்சர்காகும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம் என நான் நினைக்கிறேன." என்றார்
 
கூட்டுறவு என்பது புதிய விஷயம் அல்ல என்று குறிப்பிட்ட அவர், அதற்கான விதைகளை சர்தார் வல்லபாய் படேல் மற்றும் திரிபோவன்தாஸ் படேல் விதைத்தனர் என அமித் ஷா மேலும் கூறினார்.
 
21 கிராமங்களில் தொடங்கிய அமுல் நிறுவனத்தின், தற்போது 18,000க்கும் மேற்பட்ட பால் உற்பத்தி சங்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 36 லட்சம் பெண்கள் என ரூ.53,000 கோடி வணிகமாக வளர்ந்துள்ளது என்பதை யாராவது நம்ப முடிகிறதா? அதேபோல், நாட்டின் வளர்ச்சி இயக்கத்தின் ஒவ்வொரு துறையிலும், கூட்டுறவின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி" என அமித் ஷா குறிப்பிட்டார்

பால் பொருட்களுக்காக தொடங்கப்பட்ட அதே கூட்டுறவு இயக்கத்தை உரங்கள் மற்றும் விவசாயத்திற்காக தொடர வேண்டும் என்றும் ஷா வலியுறுத்தினார்.

அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான திறன் கூட்டுறவுக்கு உள்ளது. இதற்கு முன்னுதாரணமாக  திகழும் ‘அமுல்’ செயல்படும் முறை இதனை நமக்கு விளங்குகிறது.  அமுல் நிறுவனத்தின் இந்த சாதனைக்கு  36 லட்சம் பேர் இணைந்து செயல்படுவதே முக்கிய காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News