பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார்!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதுவரையில் நாக்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5 ஆவது காட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து, மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகின்றது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் மோடி தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியை அவரது கட்சியினர் உத்தமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக உயிரிழந்தார் என கூறிய பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ஏற்கனவே பிரதமருக்கு எதிரான நான்கு புகார்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்ததாகவும், போகப்போக ஊழல்களில் முதன்மையானவராக அவருடைய ஆயுள் முடிந்து விட்டது என்றும் மோடி பேசியதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
மறைந்த ராஜீவ் காந்தி நாட்டுக்காக தமது உயிரைக் கொடுத்தவர் என்றும், அவரை அவமதிக்கும் வகையில் மோடி பேசியதாகவும் காங்கிரஸ் கட்சி புகாரில் குறிப்பிட்டுள்ளது.