மல்லையாவை தப்பிக்க வைத்தது ஜெட்லி தான்; ராகுல் தாக்கு!

மல்லையாவை அருண் ஜெட்லி பார்க்கவில்லை என பொய் கூறுகின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 13, 2018, 03:33 PM IST
மல்லையாவை தப்பிக்க வைத்தது ஜெட்லி தான்; ராகுல் தாக்கு! title=

மல்லையாவை அருண் ஜெட்லி பார்க்கவில்லை என பொய் கூறுகின்றார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

வெளிநாடு செல்வதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை தான் சந்தித்ததாக விஜய் மல்லையா தெரிவித்தத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார். இவரது கருத்துக்கள் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது...

நாடாளுமன்றத்தில் வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை அருண் ஜெட்லியை சந்தித்து மல்லையா பேசியுள்ளார். இந்நிகழ்வை காங்கிரஸ் MP பி.எல். புனியா பார்த்துள்ளார். எனவே இவ்விவகாரம் குறித்து நிதியமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பேசிய காங்கிரஸ் MP  பி.எல். புனியா, வெளிநாடு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக மல்லையா, அருண் ஜெட்லி சந்திப்பு நாடாளுமன்றத்தில் நிகழ்ந்தது, இச்சந்திப்பினை நான் நேரில் பார்த்தேன். 

இருவரும் பென்ச்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், இச்சந்திப்பு முடிந்ததும் மல்லையா முதலில் கிளம்பினார். இந்நிகழ்வினைப் பற்றி நான் மார்ச் 2-ம் தேதியே பேட்டியளித்தேன். அதற்கு அடுத்த நாளே மல்லையா வெளிநாடு தப்பிச் சென்று விட்டார். நான் பொய் சொல்கிறேன் என நீங்கள் நினைத்தால் நாடாளுமன்ற CCTV காட்சிகளை ஆய்வு செய்து உன்மையினை தெரிந்துக்கொள்ளலாம். ஒருவேலை நான் சொல்வது பொய் என நீங்கள் நிறுபித்தால், நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ரூ. 9,000 கோடி ரூபாயினை கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இதுக்குறித்து வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரும் டிசம்பர் 10 ஆம் நாள் வழங்கப்பட உள்ளது. 

இந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானா விஜய் மல்லையா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் பங்கேற்க இருந்ததால், நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை, என் மனசாட்சி தெளிவாக உள்ளது எனக் தெரிவித்தார்.

ஆனால் விஜய் மல்லையாவின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் "உண்மை நிலை" என்று கடிதத்தை பதிவு செய்துள்ளார். 

அதில், விஜய் மல்லையா கூறியதில் "உண்மை" இல்லை. 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் போது, நாடாளுமன்றத்தில் உள்ள எனது அறைக்கு நான் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த விஜய் மல்லையா கையில் ஆவணங்களை வைத்துக்கொண்டு நடந்தே படியே என்னிடம் வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த உள்ளதாக கூறினார். அதற்கு நான் என்னிடம் பேச வேண்டாம். வங்கிளிடம் பேசுங்கள் எனக் கூறினேன். மேலும் அவரிடம் இருந்த ஆவணங்களை கூட நான் வாங்க வில்லை" என கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார். எனினும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியில் இந்த பதிலுக்கு எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து மறுப்புகள் எழுந்தவண்னம் உள்ளன.

Trending News