மலிவாகிறது CNG: அரசு எடுக்கவுள்ள இந்த நடவடிக்கையால் மக்களுக்கு விரைவில் good news

ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வருவதால், நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் பெறுவதற்கான வசதி கிடைக்கும். இது அவற்றின் செலவுகளைக் குறைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 06:33 PM IST
  • வெவ்வேறு வரிகளின் காரணமாக இயற்கை எரிவாயு விலை உயர்ந்தது.
  • நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 7.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்-பிரதமர்.
  • VAT விகிதங்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன.
மலிவாகிறது CNG: அரசு எடுக்கவுள்ள இந்த நடவடிக்கையால் மக்களுக்கு விரைவில் good news  title=

புதுடெல்லி: இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரி வகையின் கீழ் கொண்டு வரப்போவதாகவும், நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 7.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாகவும் பிரதமர் அறிவித்ததை அடுத்து இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தன.

வியாழக்கிழமை, ONGC, GSPL, இந்திரப்பிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் குஜராத் கேஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை 4 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தன.

வெவ்வேறு வரிகளின் காரணமாக இயற்கை எரிவாயு விலை உயர்ந்தது

தற்போது, ​​இயற்கை எரிவாயுவுக்கு மத்திய கலால் வரி, மதிப்பு கூட்டு வரி மற்றும் மத்திய விற்பனை வரி ஆகியவை விதிக்கப்படுகிறது. VAT விகிதங்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன. இது மத்திய பிரதேசத்தில் 14 சதவீதமாகவும், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திராவில் 14.5-14.5 சதவீதமாகவும், குஜராத்தில் 15 சதவீதமாகவும் உள்ளது. CNG-யில் இப்போது மத்திய கலால் வரி 14 சதவீதமாகவும் பல்வேறு மாநிலங்களில் 5 முதல் 24 சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது.

ALSO READ: LPG Gas Cylinder Discount: அமேசான் பே மூலம் முன்பதிவு செய்தால் 50 ரூபாய் தள்ளுபடி!!

இதில் 5 முதல் 18 சதவிகிதம் வரை வாட் ஸ்லாப் விதிக்கப்பட்டால், இவற்றின் விலை குறையும். விலைகள் மலிவானவுடன் அவற்றின் நுகர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியின் அளவை அதிகரிக்கும். இந்த சாத்தியக்கூறுகளின் காரணமாகத்தான், எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து வருகின்றன. இப்போது, CNG-யின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பாதியாக உள்ளது.

ஜிஎஸ்டி காரணமாக CNG மலிவாகும்

ஜிஎஸ்டியின் (GST) வரம்பிற்குள் வருவதால், நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் பெறுவதற்கான வசதி கிடைக்கும். இது அவற்றின் செலவுகளைக் குறைக்கும். நிறுவனங்களின் செலவுகள் குறைவதால் மற்றொரு நன்மையும் கிடைக்கும். இதன் பிறகு நிறுவனங்கள் அதிக கேஸ் சிலிண்டர்களை விற்க முடியும். குஜராத் கேஸ் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் தொழில் வாடிக்கையாளர்கள்.

2020-21 நிதியாண்டின் ஒன்பது மாதங்களில், நாட்டில் எரிவாயு நுகர்வு 5.4 சதவீதம் குறைந்து 45,124 மில்லியன் எம்.எம்.எஸ்.சி.எம். ஆகியுள்ளது. இருப்பினும், எல்.என்.ஜி நுகர்வு 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இயற்கை எரிவாயுவின் மொத்த நுகர்வுகளில் 55 சதவீதமாகும்.

ALSO READ: LPG சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றம் - முழு விவரம் இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News