பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு நியமிக்கபட்ட புதிய நான்கு எம்.பி-க்கள் பதவியேற்ப்பு!!
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடர் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தொடரில் முத்தலாக உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டிவருகிறது. கடந்த 14 ஆம் தேதி பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்யசபாவுக்கு நான்கு புதிய எம்.பி.,க்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருந்தார்.
அதன் படி, இன்று துவங்கிய நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் விவசாய சங்க தலைவர் ராம் ஷகால், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ராகேஷ் சின்ஹா, பரத நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங், சிற்ப கலைஞர் ரகுநாத் மோகபத்ரா ஆகியோர் பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு புதிய எம்.பி-களாக பதவியேற்றனர்.
Classical Dancer Sonal Mansingh, Author Rakesh Sinha and Sculptor Raghunath Mohapatra take oath as nominated members of Rajya Sabha. #MonsoonSession2018 pic.twitter.com/umbj8OiSfx
— ANI (@ANI) July 18, 2018
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சுமித்ரா மகாஜன் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது!