ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா. இவர் பலமனேரில் இயங்கி வந்த பிரம்மர்ஷி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் கில்லாடியான மிஸ்பா எப்போதும் வகுப்பில் முதலிடமே. ஆம், அதுவே அவருக்கு எமனாக போனது. மிஸ்பாவின் திறமையால் அதே பள்ளியில் படித்துவந்த ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் மகள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு வந்தார். இதனால் மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்கம் செய்ய கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பள்ளி நிர்வாகமே அதற்கு உடந்தையாகி தலைமை ஆசிரியர் ரமேஷ் மிஸ்பாவிற்கு டிசி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த போன மிஸ்பாவை வேறு பள்ளியிலும் சேர்க்க விடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், படிப்பை முழு மூச்சாக கருதி கடின உழைப்பை கொட்டி முதலிடம் பிடித்து வந்த மிஸ்பா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். ஒருகட்டத்தில் இனி வாழவே வேண்டாம் என்ற விபரீத முடிவைக் கையில் எடுத்தார், மிஸ்பா. தனது தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவைத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பம் உடைந்து போனது... படிப்பு கில்லாடி உயிர் பிரிந்துபோனது...
சிறுமியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்று உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் சிறுமியை காவு வாங்கிய பள்ளி முதல்வர் ரமேஷை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பலமனேர் காவல் நிலையம் முன்பு திரளாக பலர் திரண்டு கோஷமிட்டு சிறுமியின் உயிருக்கு நீதிகேட்டனர்.
மாணவியின் உருக்கமான தற்கொலை கடிதத்தில்...
அப்பா என்னை மன்னித்து விடுங்கள், என்னால் உங்களுக்கு பல பிரச்சினைகள். உங்கள் பிரச்சினைகள் தீர வேண்டுமென்றால் நான் போகவேண்டும். நட்பு ஒரு சிறந்தது என்று நினைத்தேன். ஆனால் எனக்கு நண்பர்கள் இல்லை. எனது பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
கடைசியில் நெருங்கிய தோழியே எனது மரணத்திற்கு காரணமாகி விட்டார். உங்களை விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்குச் செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் ..... என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துவிட்டு உலகை விட்டு விடைபெற்றார்.
தற்போது மிஸ்பாவின் மரணம் ஆந்திரா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துவருகிறது. மிஸ்பா படித்த பள்ளியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எது எப்படியோ... என்ன ஆனாலும் இனி மிஸ்பா திரும்ப வரப்போவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஆளும் கட்சியினர் என்கிறார்கள். சட்டம் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எல்லோராது எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க | மனைவியுடன் ‘கட்டாய உடல் உறவு’ பாலியல் வன்கொடுமை தான்: கர்நாடக உயர்நீதி மன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR