SC-ன் அடுத்த தலைமை நீதிபதியாக S.A.பாப்டேவை பரிந்துரைக்கும் கோகோய்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அரசுக்கு பரிந்துரை!!

Last Updated : Oct 18, 2019, 12:51 PM IST
SC-ன் அடுத்த தலைமை நீதிபதியாக S.A.பாப்டேவை பரிந்துரைக்கும் கோகோய்!  title=

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்குமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அரசுக்கு பரிந்துரை!!

டெல்லி: இந்திய தலைமை நீதிபதி (CJI) ரஞ்சன் கோகோய், நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவை அவரது வாரிசாக பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நீதிபதி எஸ்.ஏ. போட்பேவை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும் பணியை அரசாங்கம் தொடங்க வேண்டும் என்று நீதிபதி கோகோய் பரிந்துரைத்தார். ஜஸ்டிஸ் கோகோய்க்குப் பிறகு ஜஸ்டிஸ் போட்பே சீனியாரிட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் வரும் நவம்பர் 17 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்கு அடுத்த மூத்த தலைமை நீதிபதி என்ற வகையில், எஸ்.ஏ.பாப்டே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் பெயரை பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் மரபுப்படி, ரஞ்சன் கோகோய் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எஸ்.ஏ.பாப்டேவை தமக்கடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளார். 

பதவிக் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனத்திற்கான பணிகளை ரஞ்சன் கோகோய் தொடங்கி உள்ளார். அவரது பரிந்துரை ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டால் இந்தியாவின் 47 ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வார்.

உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தை சேர்ந்த பாப்டே, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். 

 

Trending News