புதுடெல்லி: "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மூன்றாவது வாரம் தொடங்கியது.இம்மாதம் சுதந்திர தினம் வர உள்ளதால் அதற்கு முன்பே மழைக்கால கூட்டத் தொடர் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த வந்த நிலையில் அதற்கு முன்பாகவே "எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதலே வேளாண்மை திருத்த சட்டம் "பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம்(Pegasus spyware), பெட்ரோல், டீசல் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வந்தனர்.
"பெகாசஸ் மென்பொருள் மூலம் நாட்டில் உள்ள எதிர்கட்சியினர் , உச்சநீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்களின் செல் போன்கள் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறின.
Rajya Sabha Chairman M Venkaiah Naidu gets emotional as he speaks about yesterday's ruckus by Opposition MPs in the House
All sacredness of this House was destroyed yesterday when some members sat on the tables and some climbed on the tables, he says pic.twitter.com/S1UagQieeS
— ANI (@ANI) August 11, 2021
அந்தப் பிரச்சனைகளை எல்லாம் இங்கு விவாதிக்க முடியாது என அரசு மறுப்பு தெரிவித்தன. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அவை கூடுவதும் முடங்குவதுமாக இருந்து வந்தது.
இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.
"இந்நிலையில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் புனித தலம் போல உள்ள நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதலே நடந்த நிகழ்வுகளால் என் மனதுக்கு மிகவும் துன்பமாக உள்ளது என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்நிகழ்வுகளால் இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை என்றும் இது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மை சிதைந்துவட்டதாகவும் அவர் கூறினார்.
Also Read | பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம்: நீதிபதி வருத்தம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR