வேலூரில் இன்று என்ற 14567 முதியோர்களுக்கான விழிப்புணர்வு உதவி எண் மற்றும் 181 என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு உதவி என்னையும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகத்தின் துறை அமைச்சர் (Minister of Social Justice and Empowerment of India) ராம்தாஸ் அத்வாலே துவக்கி வைத்தார். பின்னர் சமூக நலத்துறை தமிழ் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். இதில்மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே (Ramdas Athawale) அவர்கள் கூறியது, தமிழ்நாட்டில் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரை, ஒரு கோடியே 13 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வங்கிக் கணக்கை துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில் முத்ரா யோஜனா திட்டத்தில் தொழில் துவங்க கடன் பெற்று, 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2015 ஆண்டு முதல் இதுவரை கிராமப்புறங்களில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நகர்ப்புறங்களில் 4 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கும் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பிரதம மந்திரியை ஜன் ஆரோக்கிய திட்டத்தில் தமிழ்நாட்டில் ரூபாய் 4 ஆயிரத்து 87 கோடி மதிப்பீட்டில் இதுவரை 39 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
ALSO READ | சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்கவும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
உஜ்லா யோஜனா திட்டத்தில் தமிழ்நாட்டில் 31 கோடி ரூபாய் திட்டத்தில் இதுவரை 43 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு எல்இடி பல்பு வழங்கப்பட்டுள்ளது. கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது ஆண்டுக்கு ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கலப்பு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு 2 -1/2 லட்சம் நிதி உதவி மத்திய அரசு வழங்கி வருகிறது.
தமிழக அரசு சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஐந்து ஏக்கர் நிலங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள் எனவும் ராமதாஸ் அத்வாலே கூறினார்.
மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார மேம்பாடு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. மேலும் அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடு அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என அவர் கூறினர்.
ALSO READ | பாடப்புத்தகத்தில் சாதி பெயர்கள் நீக்கம்- தமிழக அரசு அதிரடி உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR