கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கிய நிலையில் அதனை கட்டுப்படுத்த கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலர் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கொரோனா தொற்று நிலவரம் குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார்.
மேலும் தடுப்பூசி செயல்பாடுகள், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் இன்னும் தடுப்பூசி செலுத்தாக 6% நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், இது தவிர காசநோய், கண்புரை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் போன்றவைகள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சுமார் மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க | COVID-19: வந்துவிட்டதா நான்காவது அலை? ஒரே நாளில் புதிதாக 7,584 பேர் பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR