நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!!

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, தமிழகம், தில்லி மற்றும் பஞ்சாப் உட்பட பல மாநிலங்களில் பெரிய அளவில் மின் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகள் நிலக்கரி பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகின்றன

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2021, 09:35 AM IST
  • நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன
  • இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகள் நிலக்கரி பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகின்றன.
  • சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை பெரிதும் அதிகரித்துள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!! title=

நாட்டின் மொத்த மின்சார தேவையில் 70 சதவீதம், அனல் மின் நிலையங்கள் மூலமாக நிறவேற்றப்பட்டு வரும் நிலையில், நாடு முழுதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவற்றில், போதிய அளவு நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், கடுமையான மின் தடையை சந்திக்க நேரிடும் என தமிழகம், ஒடிசா, தில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கூறியுள்ளன.

இந்தியா மட்டுமல்ல உலகின் பல நாடுகள் நிலக்கரி பற்றாக்குறையை எதிர் கொண்டு வருகின்றன. இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லியில் கையிருப்பில் இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது என்றும், உடனடியாக நிலக்கரி கிடைக்காவிட்டால், தலைநகர் தில்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில், நிலக்கரி பற்றாக்குறையை (Coal Crisis) சமாளிக்க 'சிறப்பு குழு' அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் நிலக்கரி கையிருப்பை உன்னிப்பாக கண்காணித்து நிர்வகித்து வருகிறது. மின்துறை அமைச்சகம் சனிக்கிழமை இந்த தகவலை அளித்தது. மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க, கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited) மற்றும் ரயில்வேயுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின் அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. 

ALSO READ | சீனாவைப் போல இந்தியாவிலும் மின்சார நெருக்கடி வருமா? நிலக்கரி இருப்பு குறைவு

"கோல் இந்தியா லிமிடெட் அமைச்சகம் (Coal India Limited), நிலக்கரி அமைச்சகம் இணைந்து அடுத்த 3 நாட்களில் மின் துறைக்கு ஒரு நாளைக்கு 1.6 மெட்ரிக் நிலக்கரியை அனுப்புவதற்கான வரம்பை அதிகரிக்க முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளது. இதனை நாள் ஒன்றுக்கு 1.7 மெட்ரிக் டன்னாக மேலும் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என எரிசக்தி அமைச்சகம் கூறியுள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை பெரிதும் அதிகரித்துள்ளதை அடுத்து நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. இதன் காரணமாக நெரிக்கடி நிலை மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது

ALSO READ | Vehicle Scrappage Policy: பழைய காரின் பதிவு கட்டணம் 8 மடங்கு உயர்வு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News