மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதல்; கடும் நடவடிக்கை தேவை: மோடிக்கு கடிதம்

பாலிவுட் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு, மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதலை தடுக்க கடும் நடவடிக்கை தேவை என கடிதம் எழுதியுள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 24, 2019, 01:32 PM IST
மதத்தின் பெயரால் அதிகரிக்கும் தாக்குதல்; கடும் நடவடிக்கை தேவை: மோடிக்கு கடிதம் title=

புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் மக்களிடையே கோபத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. "ஜெய் ஸ்ரீராம்" என்ற பெயரில் இது போன்ற குற்றம் அதிகரித்து வருவதால் நாட்டின் ஒரு பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.

வட மாநிலங்களில் "ஜெய் ஸ்ரீராம்" என்ற முழக்கத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இதில் பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் "ஜெய் ஸ்ரீராம்" வார்த்தைக்காகவும் "பசு"வுக்காகவும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகவும் வேதனையான விசியம். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து மோடி தலைமையிலான மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்.

2009 முதல் அக்டோபர் 2018 வரை நாட்டில் வெறுக்கத்தக்க கிட்டத்தட்ட 254 சம்பவங்கள் மதங்களின் பெயரால் குற்றங்கள் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 840 குற்றச் சம்பவங்கள் தலித்துக்கு எதிராக மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தை எழுதியது வேறுயாரும் இல்லை, பாலிவுட் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். 

மதத்தின் பெயரால் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு திரைத்துறையினர் பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் 40க்கும் மேற்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் என  அனைவரும் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த பட்டியலில் ஷியாம் பெனகல், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதேரா சாட்டர்ஜி, கொங்கொனா சென் சர்மா, சுபா முட்கல், அனுபம் ராய் மற்றும் மணிரத்தனம் போன்ற பெரிய பெயர்கள் உள்ளன.

அந்த கடிதத்தில், இதுபோன்ற சம்பவங்களுக்கு வெறும் கண்டங்கள் மட்டுமே போதாது, அதற்கு எதிராக என்ன கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? இதுபோன்ற எந்தவொரு குற்றமும் மீண்டும் யாரும் செய்யக்கூடாது என்றும், அத்தகையவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து எழுதப்பட்டு உள்ளது.

PM Narendra Modi

Trending News