மகாராஷ்டிராவில் நடைப்பெற்று வரும் நொடிக்கு நொடி பரபரப்புக்கு இடையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சஞ்சய் ரவுத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அஜித் பவார் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை என தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்., "ஷரத் பவார் ஒரு தேசியத் தலைவர். மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை அமைக்க முயன்றால் அது நடக்காது. இது பாஜக மற்றும் அஜித் பவார் எடுத்த தவறான நடவடிக்கை. 165 MLA-க்கள் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் NCP வசம் உள்ளனர்.
அஜித் பவார் நேற்று பொய்யான ஆவணங்களை ராஜ் பவனுக்கு எடுத்துச் சென்றுள்ளார், ஆளுநரும் அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று, ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்டாலும், அதை இப்போதே செய்யலாம். 49 தேசியவாத காங்கிரஸ் MLA-க்கள் எங்களுடன் உள்ளனர்.
அஜித் பவார் தனது வாழ்க்கையில் மிகவும் தவறான செயலைச் செய்துள்ளார், இந்த வயதில் அஜித் பவார், முதுகில் குத்தியுள்ளார்.
CBI, ED, வருமான வரித்துறை மற்றும் காவல்துறை ஆகியவை பாஜக-வின் நான்கு முக்கிய கட்சி ஊழியர்கள். தற்போதைய ஆளுநரும் அவர்களின் தொழிலாளி. பாஜக இப்போது தங்கள் சொந்த ஆட்டத்தினால் சிக்கியுள்ளது. இது அவர்களின் முடிவின் ஆரம்பம்." என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வர உள்ள நிலையில் பாஜக MP-யின் திடீர் சந்திப்பால் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.
--- மகாராஷ்டிராவில் அரசியல் நாடகம் ---
மகாராஷ்டிராவில் நேற்று யாரும் எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாரும், பாஜக-வும் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இவ்விரு கட்சி கூட்டணியில் ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் (Sharad Pawar), சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.
பதவியேற்பு நாள் முன் இரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார்.
ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக அடுத்த நாள் காலை மகாராஷ்டிராவில் பாஜக (Bharatiya Janata Party) தனது அரசாங்கத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைத்தது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வராக பதவியேற்றார், NCP கட்சியை சேர்ந்த அஜித் பவார் (Ajit Pawar) துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும்(54) தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. எனினும் இதனை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.