பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் எல்பிஜி மானியத்திற்காக மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் 9,000 கோடி ரூபாய் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் நேரடியாக பயனடைவதால் இதற்கான மானியங்களை வழங்க மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. 2024 தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் எல்பிஜி மானியத்திற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.11,925.01 கோடி அறிவித்தார். தேர்தலுக்கு முன்பு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு மானியம் ஒரு சிலிண்டருக்கு ரூ.300 வழங்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் PMUY பயனாளிகளுக்கு ரூ. 300 மானியத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் படிக்க | 'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?
மே 2022ல், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கு அரசு சிலிண்டருக்கு ரூ. 200 மானியம் வழங்கியது. பின்பு 2023 அக்டோபரில் அதனை ரூ.300 ஆக உயர்த்தியது. இந்த இலவச எல்பிஜி இணைப்புகளுக்கான நிதி உதவி 2026 நிதியாண்டு வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 70,000 புதிய இணைப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த எல்பிஜி மானியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் மத்திய அரசின் இந்த மானியத்திற்கான மொத்த செலவு ரூ.12,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மானியத்தை பெரும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நேரடியாக அவர்கள் வங்கி கணக்கில் பணம் வரவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் லக்பதி திதி திட்டத்தின் கீழ் பெண் பயனாளிகளின் இலக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்துவதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இந்தியா முழுவதும் உயர்கல்வியில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் சேர்க்கை 28% அதிகரித்துள்ளது. மேலும் பெண் முத்தலாக் சட்டத்திற்கு தடை, பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொந்த வீடு என அவர்களுக்கு பல திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. 9 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகளை ஊக்குவிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த இடைக்கால பட்ஜெட்டில் பாலின சமத்துவத்தை நிவர்த்தி செய்து, பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தப்பட்டு இருந்தது" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | காதலனின் பிறப்புறுப்பு வெட்டி எறிந்த காதலி! காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ