நவாப் மாலிக்: இடைக்கால விடுதலை மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

தாவூத் இப்ராகிம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு இடைக்கால நிவாரணம் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 15, 2022, 12:44 PM IST
நவாப் மாலிக்: இடைக்கால விடுதலை மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது title=

தாவூத் இப்ராகிம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு இடைக்கால நிவாரணம் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆட்கொணர்வு மனுவின் இடைக்கால விண்ணப்பங்களையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

தாவூத் இப்ராஹிமின் சகோதரிக்கு தொடர்புடைய 1999- 2005 நில பேரத்தின் அடிப்படையில் "பயங்கரவாத நிதியுதவியில் ஈடுபட்ட" பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர கேபினட் அமைச்சர் நவாப் மாலிக்-கை விடுவிக்க பாம்பே உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிபதிகள் பி.பி.வரலே மற்றும் எஸ்.எம்.மோடக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், "உடனடி விடுதலை" என்ற இடைக்கால நிவாரணம் கோரிய மாலிக்கின் ஆட்கொண்டர்வு மனு மீது உத்தரவு பிறப்பித்தது.

"சில விவாதத்திற்குரிய பிரச்சினைகள் எழுப்பப்படுவதால், அவற்றிம் விசாரணை விரிவாக நடக்க வேண்டியுள்ளது. எங்களால் ஒதுக்கப்பட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, இடைக்கால விண்ணப்பத்தில் கோரிக்கைகளை அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன," என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க |  என்சிபி தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கைது

முன்னதாக, தாவூத் இப்ராகிம் மற்றும் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக என்சிபி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக்கை விசாரித்த அமலாக்க இயக்குனரகம் (ED) பிப்ரவரி 23 ஆம் தேதி கைது செய்தது.

ஆதாரங்களின்படி, நிழலுலக தாதாக்கள் மற்றும் நாட்டை விட்டு தப்பியோடிய பயங்கரவாத நிதியாளரான தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஸ், இக்பால், உதவியாளர் சோட்டா ஷகீல் மற்றும் பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்க இயக்குனரகம் முன் ஆஜராகுமாறு நவாப் மாலிக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அதிகாரிகள் அவரை பிப்ரவரி 23 ஆம் தேதி கைது செய்தனர்.

மேலும் படிக்க | கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News