பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நீதிபதி ஜிஎஸ் படேல் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆகிய இருவரின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு தொடர்பான உத்தரவுகளில், இரு தரப்பினரின் தனிப்பட்ட அடையாளங்களை பாதுகாக்கும் வகையில், நீதிமன்ற பதிவேடுகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் வழக்கு விபரங்கள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நீதிபதி பட்டேல் தனது உத்தரவில், " வழக்கு தொடர்பான உத்தரவில்/தீர்ப்பில், பெயர்களை குறிப்பிடாமல் ‘A vs B’, ‘P vs D’ என்றே எழுதப்படும் என்றும் வாதி, பிரதிவாதி இருவரின் பெயர் மின்னஞ்சல் முகவரி, மொபைல் அல்லது தொலைபேசி எண்கள், போன்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் (personally identifiable information -PII ) உத்தரவில் குறிப்பிடப்படாது " என கூறப்பட்டுள்ளது.
ALSO READ | NEET-SS 2021: இளம் மருத்துவர்களை பந்தாடாதீர்கள் - உச்ச நீதிமன்றம்
மேலும் "இந்த வழக்குகளில் உத்தரவுகள்/தீர்ப்புகளை வெளியிடுவது பற்றி, குறிப்பிட்ட நீதிமன்றம்" அனைத்து உத்தரவுகளும் தீர்ப்புகளும் தனிப்பட்ட முறையில், தனி அறைகளில் வெளியிடப்படும் என்றும், திறந்த நீதிமன்றத்தில் வெளியிடப்படாது என்றும் கூறியுள்ளது" மும்பை நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு நேரில் ஆஜராக வேண்டியது கட்டாயம் எனவும், ஆன்லைன் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே விசாரணைக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். உதவி ஊழியர்கள் (எழுத்தர்கள், பியூன்கள், ஆகியோர்), நீதிமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது
நீதிமன்றம் இது குறித்த மேலும் கூறுகையில், '' எந்தவொரு உத்தரவையும் பொது தளத்தில் வெளியிட வேண்டும் என்றால், இதற்கு நீதிமன்றத்தில் தனிப்பட்ட வகையில் வெளியிட வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் அனுமதி இன்றி, பாலியல் வழக்கில் சபந்தப்பட்டவர்களின், தனிப்பட்ட அடையாளங்கள், வழக்கு மற்றும் தீர்ப்பு விபரங்கள் சமூக ஊடகங்கள் உட்பட எந்த ஒரு ஊடகங்களில் வெளியிட கூடாது எனவும் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கின் சாட்சிகள், வழக்கமான உறுதிமொழியை தவிர கூடுதலாக, வழக்கு விபரங்களை வெளியிடாமல் இரகசியத்தன்மை பாதுகாப்பேன் என்ற உறுதி மொழியிலும் கையெழுத்திட வேண்டும்.
இவை ஆரம்ப கட்ட வழிகாட்டுதல்கள் மட்டுமே மற்றும் தேவைக்கேற்ப திருத்தம் அல்லது மாற்றத்திற்கு உட்பட்டவை என கூறியுள்ள நீதிமன்ரம். இந்த உத்தரவின் எந்தவொரு அம்சத்தையும் மீறுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என தெளிவு படுத்தியுள்ளது.
ALSO READ | ₹6 லட்சம் மதிப்பிலான ப்ளூடூத் செருப்பு; வசூல் ராஜா MBBS பாணியில் ஹைடெக் காப்பி.!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR