இரு மாநிலங்களில் பாஜக வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!!

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது இறுதி ஆகி விட்டது.

Last Updated : Dec 18, 2017, 01:30 PM IST
இரு மாநிலங்களில் பாஜக வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!! title=

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுவது இறுதி ஆகி விட்டது.

இந்நிலையில் பாஜக-வின் இரு மாநில தேர்தல் வெற்றி குறித்து பல்வேறு கட்சிகளை தேர்தல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்: குஜராத், இமாச்சலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். இது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: எதிர்ப்பு கருத்துக்களை முறியடித்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பால் பாஜக ஒழிந்து விட்டதாக கூறினார்கள். ஆனால் அதற்கு பின் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வடமாநிலங்களை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் வாயடைத்து போய் உள்ளன. யார் வந்தாலும் பாஜக-வின் வெற்றியை தடுக்க முடியாது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி.

அதிமுக எம்பி மைத்ரேயன்: குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வெற்றி. பிரதமர் மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பாஜக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்: இமாலய வெற்றி! பிரதமர் திரு @narendramodi அவர்களின் முன்னேற்ற திட்டங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் கொடுத்துள்ள #குஜராத் #இமாச்சலப்பிரதேச மக்களுக்கு பாராட்டுக்கள். இந்தியாவை உலகில் முதல்நிலை நாடாக மாற்ற பெரும் முயற்சி தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரதரமரின் கரத்தை வலுப்படுத்த அவருடன் 130 கோடி மக்களும் கைகோர்த்து பயணிப்பதில் பெறுமை கொள்வோம். பிரதமருக்கு எனது சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் வாழ்த்துக்கள்.

Trending News