ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று பிடிபட்ட தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாஜகவில் தீவிர உறுப்பினராக இருந்துள்ளார். அவர் ஜம்முவில் பாஜக கட்சியின் சிறுபான்மை மோர்ச்சா சமூக ஊடகப் பொறுப்பாளராகவும் இருந்தார். இன்று காலை ஜம்முவின் ரியாசி பகுதியில் உள்ள கிராம மக்களால் தலிப் ஹுசைன் ஷா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், பல கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு பின்பு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். எந்தவொரு பின்னணி சரிபார்ப்பும் இல்லாமல் மக்கள் கட்சியில் சேர அனுமதிக்கும் ஆன்லைன் உறுப்பினர் அமைப்பு முறையை பாஜக குற்றம் சாட்டி உள்ளது.
மேலும் படிக்க | ஆதாரமாக கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள் நீதிமன்றத்தில் வெடித்து விபரீதம்!
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பதானியா கூறுகையில், "இந்த கைது நடவடிக்கையால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. இது ஒரு புதிய மாடல் என்று நான் கூறுவேன். பா.ஜ.க.விற்குள் நுழைவது, அணுகல் பெறுவது, ரெக்கார்ட் செய்வது. உயர்மட்டத் தலைமையைக் கொல்லும் சதி கூட இருந்தது. இந்தியா முழுவதும், பயங்கரவாதத்தை பரப்ப விரும்புபவர்கள் உள்ளனர். இப்போது யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பாஜகவில் உறுப்பினராகலாம். குற்றவியல் பதிவு அல்லது வேறு வழக்குகள் குறித்து சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லாததால் இது ஒரு குறைபாடு என்று நான் கூறுவேன்" என்று அவர் கூறினார்.
மே 9 அன்று, ஜம்மு மாகாணத்தில் பாஜக கட்சியின் ஐடி மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளராக ஷாவை பாஜக நியமித்தது. தாலிப் ஹுசைன் ஷா, டிராஜ் கோட்ரன்கா, புதான், ரஜோரி மாவட்டம் , புதிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜம்முவை சேர்ந்த பிஜேபி சிறுபான்மை மோர்ச்சா அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஜம்மு தலைவர் ரவீந்திர ரெய்னா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களுடன் ஷா எடுத்துக்கொண்ட பல படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் ரியாசி கிராம மக்களுக்கு ரொக்கப் பரிசு அறிவித்து அவர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர். "ரியாசி மாவட்டத்தில் உள்ள துக்சான் கிராம மக்களின் தைரியத்திற்கு வாழ்த்துகள். 2AK துப்பாக்கிகள், 7 எறிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உடன் இரண்டு LeT பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கிராம மக்களால் கைது செய்யப்பட்டனர்" என்று ஜம்மு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் பதிவிட்டுள்ளார்.
Hats off to the courage of villagers of Tuksan, in #Reasi district . Two #terrorists of LeT apprehended by villagers with weapons; 2AK #rifles, 7 #Grenades and a #Pistol. DGP announces #reward of Rs 2 lakhs for villagers. pic.twitter.com/iPXcmHtV5P
— ADGP Jammu (@igpjmu) July 3, 2022
இரண்டு மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளை கைது செய்த ரியாசி கிராம மக்களின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன். சாமானியர்களின் இத்தகைய உறுதியானது பயங்கரவாதத்தின் முடிவு வெகுதொலைவில் இல்லை என்பதைக் காட்டுகிறது. அவர்களுக்கு எதிராக துணிச்சலான செயல்களுக்காக கிராம மக்களுக்கு ₹ 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ட்வீட் செய்துள்ளார்.
போலீசாரின் கூற்றுப்படி, ரஜோரி மாவட்டத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டதில் ஷாவிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததில் இருந்து, ஷா ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்களின் ரேடாரில் இருந்தார். "அவர் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக எங்கள் ரேடாரில் இருக்கிறார். கோட்ராங்காவில் வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் பொதுமக்களைக் கொன்றதில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகித்தோம். இன்று மீட்கப்பட்ட ஆயுதங்களில் அவை உறுதி படுத்தப்பட்டுள்ளன" என்று அதிகாரி கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR