அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி டாக்டர் ஹர்ஷ்வர்தன்... காரணம் என்ன!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் ஆன டாக்டர் ஹர்ஷ்வர்தன், தான் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 3, 2024, 06:10 PM IST
அரசியலுக்கு முழுக்கு போட்ட பாஜக எம்பி டாக்டர் ஹர்ஷ்வர்தன்... காரணம் என்ன! title=

பாரதீய ஜனதா கட்சி, நேற்று, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. மொத்தம் 195 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல பாஜக எம்பிக்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. பல புதிய முகங்களுக்கும் இளைஞர்களுக்கும், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழக்கும் எம்பி களில் ஒருவரான டாக்டர் ஹர்ஷ்வர்தன், தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், மருத்துவ சேவைக்கு திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன், தான் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், சாந்தினி செக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக தன்னை அறிவிக்காத நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், தில்லி சாந்தினி சாப் பகுதியில் இருந்து போட்டியிட்ட டாக்டர் ஹர்ஷ்வர்தன், இருமுறையும் வெற்றி பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு, அவர் 5,19,055 வாக்குகள் பெற்று, காங்கிரஸ் வேட்பாளரான ஜெயபிரகாஷ் அகர்வாலை வெற்றி கொண்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2,90,910 என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக, 2014 ஆம் ஆண்டில், டாக்டர் வர்தன் 4,37,938 வாக்குகளைப் பெற்று, தேர்தலை வென்றார். அத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அஸ்துதோஷ் 3,01,618 வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

 

 

அரசியலில் இருந்து விடைபெறுவதற்கான காரணங்களை மேற்கோள் காட்டி பதிவிட்டுய்ள்ள, ஹர்ஷ் வர்தன் ஒரு ENT நிபுணராக தனது மருத்துவ சேவைக்கு திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும், கிருஷ்ணா நகரில் தனது சேவையை மீண்டும் தொடங்குவதாகவும் கூறினார்.

நேற்று பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத்தின் காந்திநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உட்பட ஆளும் கட்சியான பாஜக - முக்கிய தொகுதிகளில்  போட்டியிட இருக்கும் 195 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. பாஜகவின் முதல் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பர்வேஷ் வர்மா, ஹசாரிபாக் எம்பி ஜெயந்த் சின்ஹா, போபால் எம்பி சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் தெற்கு டெல்லி எம்பி ரமேஷ் பிதுரி உட்பட 33 எம்பிக்களுக்குப் பதிலாக புதிய முகங்கள் இடம் பெற்றுள்ளன.

Trending News