Watch: ஹோட்டலில் போலீஸை சரமாரியாக தாக்கிய BJP கவுன்சிலர்...

உணவகத்திற்கு பெண்ணுடன் வந்த காவலரை சரமாரியாக தாக்கிய BJP கவுன்சிலர் மணீஷ் குமார்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2018, 04:38 PM IST
Watch: ஹோட்டலில் போலீஸை சரமாரியாக தாக்கிய BJP கவுன்சிலர்... title=

உணவகத்திற்கு பெண்ணுடன் வந்த காவலரை சரமாரியாக தாக்கிய BJP கவுன்சிலர் மணீஷ் குமார்...! 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள உணவகம் ஒன்றில் பி.ஜே.பி கவுன்சிலர் மணீஷ் குமார் மற்றும் துணை இன்ஸ்பெக்டர் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் இன்ஸ்பெக்டரை பி.ஜே.பி கவுன்சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் துணை ஆய்வாளர் ஒருவர் ஒரு பெண் வழக்கறிஞருடன் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது, ஒரு பணியாளருடன் காவலருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க. கவுன்சிலர் அந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் பெரிதாக்கு நிலையில், துணை ஆய்வாளரை பி.ஜே.பி கவுன்சிலர் மணீஷ் குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதையடுத்து, பா.ஜ.க. கவுன்சிலர் மணீஷ் குமாரை கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 395 (குற்றவாளிக்கு தண்டனை) மற்றும் 354 (அவரது அடக்குமுறையை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட பெண் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தி) கீழ் 40, கீழ் வழக்கு பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News