சினையாக இருந்த வெள்ளாட்டினை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற பிஹார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்!
பிஹார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் பர்சா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் மகாஜினி தேவி, இவரது வீட்டில் வெள்ளாடு ஒன்றை வளர்த்து வந்தார். 3 மாத சினை-யாக இருந்த ஆட்டினை அப்பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மதுபோதையில் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அந்த ஆடு பரிதாபமாக உயிர் இழந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி சிறுவர், சிறுமிகள் ஊர் பொதுமக்களிடன் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை ஊர்பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் ஆட்டின் உரிமையாளர் மகாஜினி தேவி காவல்துறையில் புகார் அளிக்க, அவரது புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் பெயர் முகமது சிர்மன் (வயது 27) எனவும், அப்பகுதியில் தினக்கூலியாக பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது. மேலும் இக்குற்றச் சம்பவமானது கடந்த ஜனவரி, 15-ஆம் நாள் நிகழ்ந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக பிஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இளைஞருக்கு மது கிடைத்தது எப்படி என்பது குறித்து தகவல் இல்லை, இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முகமது சிர்மன் மீது முறையற்ற பாலியல் உறவு, விலங்கை கொலை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த ஆட்டின் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஹரியானாவில் சினை ஆடு ஒன்றினை 8 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் பிஹாரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.