Bihar Oath Ceremony 2020: பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நான்காவது முறையாக பதவியேற்கிறார்

நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமித் ஷா (Amit Shah) மற்றும் ஜே.பி.நடா (JP Nadda) ஆகியோர் பாட்னா செல்கின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2020, 04:15 PM IST
  • பீகார் புதிய முதல்வராக திங்கள்கிழமை (நவம்பர் 16) நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார்.
  • பீகார் முதல்வராக நிதீஷ் நான்காவது முறையாக பதவியேற்பார்.
  • நிதீஷுடன் மொத்தம் 12 அல்லது 14 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Bihar Oath Ceremony 2020: பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நான்காவது முறையாக பதவியேற்கிறார் title=

Bihar Oath Ceremony 2020: பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (NDA government in Bihar) அரசாங்கத்தில் எந்த அமைச்சர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது மாலை 4.30 மணிக்கு நடைபெறும் பதவிபிரமாண விழாவில் மட்டுமே தெரியவரும். இருப்பினும், அமைச்சர் பதவியைப் பெறும் சில தலைவர்களின் பெயர்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. அவர்களில், கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னி முன்னணியில் இருந்தார். சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், தான் அமைச்சராகப் போவதாக சாஹ்னி சமூக ஊடகங்களில் அறிவித்தார். இதற்கு முதலமைச்சர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமித் ஷா (Amit Shah) மற்றும் ஜே.பி.நடா (JP Nadda) ஆகியோர் பாட்னா செல்கின்றனர். 

அமைச்சராக யாருக்கெலாம் வாய்ப்பு? இன்று முதல்வர் நிதீஷ் குமாருடன் 14 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சரவையில் பதவியேற்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்களில் 6 ஜே.டி.யு மற்றும் 6 பாஜக தலைவர்கள் ஆவார்கள். இந்த முறை பீகாரில், முன்னாள் அமைச்சர்களுக்கு பதிலாக சில புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்க்கலாம். நிதீஷ்குமாருக்கு (Nitish Kumar) நெருக்கமாக கருதப்படும் பிஜேந்திர பிரசாத் யாதவ் இவர்களில் அடங்குவார். இது தவிர, ஷ்ரவன் குமார், விஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி, அசோக் சவுத்ரி, மேவலால் சவுத்ரி, ஷீலா மண்டல், ராம்பிரீத் பாஸ்வான், நரேந்திர நாராயண் யாதவ், சந்தோஷ் மஞ்சி மற்றும் மகேஸ்வர் ஹசாரி ஆகியோர் அமைச்சர்களாக மாற வாய்ப்புள்ளது. மறுபுறம், மங்கல் பாண்டே தவிர, நந்த்கிஷோர் யாதவும் பதவியேற்கலாம். 

மறுபுறம், பீகாரில் முதலமைச்சர் நிதீஷ் குமாருடன் இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாஜக சட்டப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்கிஷோர் பிரசாத், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமார் சார்பில் பொறுப்பேற்க அழைப்பு வந்ததாக தெரிவித்திருந்தார். ரேணு தேவி அரசாங்கத்தின் இரண்டாவது துணை முதல்வராக இருக்கலாம்.

ALSO READ |  அமெரிக்க தேர்தலை நினைவுபடுத்தும் பீகார் தேர்தல்..!!

ஊடக அறிக்கையின்படி, நிதீஷின் அமைச்சரவையில் மொத்தம் 36 அமைச்சர்கள் இருக்கலாம். எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு ஒதுக்கீடு கிட்டத்தட்ட 20 ஆகும். அதே நேரத்தில் ஜே.டி.யு ஒதுக்கீட்டில் முதல்வர் உட்பட 14 அமைச்சர்கள் இருக்க உள்ளனர். இந்த முறை பழைய அமைச்சர்களுக்கு நிதீஷ் அரசாங்கத்தில் குறைந்தபட்சம் இடம் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு காரணம் இரு கட்சிகளுக்கும் இடையிலான வெற்றி இடங்களின் வேறுபாடு. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 74 இடங்கள் கிடைத்தாலும், ஜேடியுவுக்கு 43 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News