முக்கிய செய்தி: Covid-19 பரிசோதனை குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டது ICMR

கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ICMR தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 06:47 AM IST
  • நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
  • கொரோனா பரிசோதனை குறித்து மத்திய அரசு நிவாரண செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என ICMR தெரிவித்துள்ளது.
முக்கிய செய்தி: Covid-19 பரிசோதனை குறித்து புதிய அறிக்கையை வெளியிட்டது ICMR title=

புதுடெல்லி: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை குறித்து மத்திய அரசு நிவாரண செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரிசோதனை குறித்து ஐசிஎம்ஆர் (ICMR https://zeenews.india.com/tamil/india/amazing-results-of-covishield-cova...) பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயாளியுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ICMR தெரிவித்துள்ளது.

அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே சோதனை அவசியம்

அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என ICMR தெரிவித்துள்ளது. வயதான முதியவர்கள், ஏற்கனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அதிக ஆபத்தில் உள்ளவர்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ICMR-ன் புதிய வழிகாட்டுதல்கள்

வயதானவர்கள் அல்லது ஏற்கனவே ஏதேனும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மட்டும் கொரோனா (Coronavirus) நோயாளியுடன் தொடர்பு கொண்டிருந்தால், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், பிறர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் ICMR கூறியுள்ளது.

ALSO READ | இன்று முதல் Precaution Dose; தகுதியானவர்கள் யார், பதிவு செய்வது எப்படி 

கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட சுகாதாரத் துறையின் தரவுகளின்படி, நாட்டில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீதம் அதிகமாகும். நேற்று வந்த புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, நாட்டில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில்தான் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ளன

நாட்டிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. திங்களன்று, மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் 44,388 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. 

மறுபுறம், மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 24,287 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு இடையில், நேற்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான (Vaccination) செயல்முறையும் நாட்டில் தொடங்கியுள்ளது. 

ALSO READ | Corona Spread: நாடாளுமன்றத்தை ஆக்ரமித்த கொரோனா! 400 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News