2 நாள்களில் 718 பேர்... மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழையும் மியான்மர் நாட்டினர் - காரணம் என்ன?

Manipur Updates: மணிப்பூரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 718 மியான்மர் நாட்டினர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 25, 2023, 08:38 AM IST
  • இதுகுறித்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையிடம் மணிப்பூர் அரசு விளக்கம் கேட்டது.
  • 301 குழந்தைகள், 208 பெண்கள் உள்பட 718 பேர் சட்டவிரோதமாக வந்துள்ளனர்.
  • அவர்கள் எல்லையை ஒட்டிய கிராமங்களில் தங்கியிருப்பதாக தகவல்.
2 நாள்களில் 718 பேர்... மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழையும் மியான்மர் நாட்டினர் - காரணம் என்ன? title=

Manipur Updates: கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் குறைந்தபட்சம் 718 மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் எப்படி சரியான பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்த விரிவான அறிக்கையை மணிப்பூர் அரசு அசாம் ரைபிள்ஸிடம் கோரியுள்ளது. இது உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

பள்ளத்தாக்கைப் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் மெய்டீஸ் இன மக்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கிப் பழங்குடியினர் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிலவும் இன கலவரம் காரணமாக மணிப்பூரில் பதட்டம் நிலவுகிறது. இதன் மத்தியில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும் 700 மியான்மர் நாட்டவர்கள் எவ்வாறு இந்தியாவிற்குள் நுழைந்தார்கள் என்று அஸ்ஸாம் ரைபிள்ஸிடம் விளக்கம் கேட்கும் மணிப்பூர் அரசின் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. 

அதாவது, 301 குழந்தைகள் மற்றும் 208 பெண்கள் உள்பட 718 மியான்மர் நாட்டினர், மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரிப்பு - வலுக்கும் கண்டனங்கள்

இந்தியாவுக்கு வந்த புதிய மியான்மர் நாட்டவர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொண்டு வந்துள்ளனரா என்பதை அறிய வழி இல்லை என்று மாநில அரசு கவலை கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மூலம் அறிய முடிகிறது. அந்த 718 சட்டவிரோத மியான்மர் நாட்டினரை உடனடியாகத் திரும்பி அனுப்புமாறு அசாம் ரைபிள்ஸுக்கு மாநில அரசு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது,” என்று மணிப்பூர் தலைமைச் செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மர் பிரஜைகள் சனி (ஜூலை 22) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 23) மணிப்பூருக்குள் நுழைந்ததாகவும், இப்போது மியான்மர் எல்லையில் உள்ள அனைத்து கிராமங்களான லஜாங், போன்ஸ், நியூ சம்தால், நியூ லஜாங், யாங்னோம்பாய், யாங்னோம்பாய் சா மில் மற்றும் ஐவோம்ஜாங் ஆகிய ஏழு இடங்களில் அவர்கள் தங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, செல்லுபடியாகும் விசா அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் மியான்மர் பிரஜைகள் மணிப்பூருக்குள் நுழைவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படையாக உள்ள அசாம் ரைபிள்ஸிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் அரசின் அந்த அறிக்கையில்,"718 அகதிகளின் புதிய சட்ட விரோத நுழைவை மாநில அரசு மிகுந்த உணர்திறனுடன் மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது. ஏனெனில் இது தற்போது நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னைகளின் பார்வையில் சர்வதேச மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்கவும், அத்தகைய மியான்மர் நாட்டினரின் பயோமெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களையும் பதிவுசெய்து வைத்திருக்குமாறு சாண்டல் மாவட்டத்தின் துணை ஆணையர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், பிப்ரவரி 2021இல் மியான்மரில் இராணுவம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான மியான்மர்கள் நாட்டினர் மிசோரமுக்கு தப்பிச் சென்றனர். அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இப்போது மலைபாங்கான மிசோரம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். சுமார் 5,000 மியான்மர்களும் முன்பு மணிப்பூரில் தஞ்சம் புகுந்தனர். மணிப்பூர் சுமார் 400 கி.மீ., மற்றும் மிசோரம் சுமார் 510 கி.மீ., மியான்மருடன் வேலி இல்லாத எல்லையைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | மணிப்பூர் நிர்வாண சம்பவத்தன்று மற்றொரு கொடூரம்... 2 இளம்பெண்களை சிதைத்த வன்முறையாளர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News