போபால் என்கவுண்டர்: தீர்த்துக்கட்டும்படி உத்தரவிடும் ஆடியோ வெளியாகியுள்ளது

போபாலில் 8 பேர் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலமான போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிச்சென்ற 8 பேர் கடந்த 31-ம் தேதி போலீஸ் எண்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டனர். பணியில் இருந்த காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிச் சென்றனர். 8 தீவிரவாதிகளும் போபால் புறநகர் பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். 

Last Updated : Nov 4, 2016, 09:58 AM IST
போபால் என்கவுண்டர்: தீர்த்துக்கட்டும்படி உத்தரவிடும் ஆடியோ வெளியாகியுள்ளது title=

போபால்: போபாலில் 8 பேர் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலமான போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிச்சென்ற 8 பேர் கடந்த 31-ம் தேதி போலீஸ் எண்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்டனர். பணியில் இருந்த காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிச் சென்றனர். 8 தீவிரவாதிகளும் போபால் புறநகர் பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். 

அப்போது போலீசாரை நோக்கி தீவிரவாதிகள் சுட்டதால் பதில் தாக்குதலில் அவர்கள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இது போலி எண்கவுண்டர் என காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில்  8 பேர் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக புதிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிமி தீவிரவாதிகள் 8 பேரை சுட்டுக் அதில் 8 பேரையும் தீர்த்துக்கட்டும் படி (நிப்டோவோ சப்கோ) என்று போலீசாருக்கு உயரதிகாரி உத்தரவிடும் வகையில் குரல் பதிவாகியுள்ளது.

Trending News