பெங்களூரு - சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்

Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2023, 07:38 PM IST
  • நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ரயில்வே பணிகள்
  • பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள்
  • இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைப்புப் பணிகள் நிறைவேற்றப்படும்
பெங்களூரு - சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில் title=

பெங்களூரு: பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 92% திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன, மீதமுள்ளவை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து பாதைகள், பெட்டிகள் மற்றும் மேம்பாலங்களுடன் மொத்தம் 4.5 கிமீ நீளத்தை உள்ளடக்கியது.

இந்த பணிகள் முடிவடைந்தால், சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும், மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களால் 44 ரயில்களின் வேகத்தை ரயில்வே அதிகரித்தது குரிப்பிடத்தக்கது.

சென்னை - பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை - மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும் சென்னை - ஜோலார்பேட்டை ரயில் போன்ற புதிய ரயில் சேவைகளும் தொடங்கவுள்ளது.  இந்த ரயில்கள் மூலம் பெங்களூரு - சென்னை இடையேயான பயண நேரமானது 30 முதல் 45 நிமிடங்கள் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

சிக்னல் இல்லாத ஒகலிபுரம் வழித்தடத்தில் பெங்களூரு பிரிவு மூலம் பெங்களூரு-சென்னை தண்டவாளத்தில் இரண்டு வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் (Reinforced Cement Concrete) ஸ்லாப்கள் பொருத்தும் பணி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தொடங்கியுள்ளது. தற்போதுள்ள 9.15 மீட்டருக்குப் பதிலாக 20.5 மீட்டர் புதிய கர்டர் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு இறுதியில் எட்டு வழித் தாழ்வாரத்தின் பணி தொடங்கும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது ஜூன் 16, 2015 அன்று தொடங்கியது. அப்போதும், அந்தப் பணிகள் 15 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாமலேயே நிலுவையில் இருந்துவந்தது.

தற்போது 92% திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ளவை இந்த ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்குவரத்துத் தடம், மொத்தம் 4.5 கிமீ நீளத்தில், பாதைகள், தண்டவாளங்கள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேலும் படிக்க: இனி ஆன்லைனில் ரம்மி விளையாடினால்.. இவ்வளவு தண்டனையா? ஜாக்கிரதை!

இந்த கட்டுமானப் பணியை எளிதாக்குவதற்காக எஸ்பிசி யார்ட், லைன் மற்றும் பவர் பிளாக் இரவு 11 மணி முதல் காலை 5.30 மணி வரை எடுக்கப்பட்டது. 45.7 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் செய்யப்படுகிறது.

350 டன் எடையுள்ள ரோடு கிரேன், மூன்று டவர் கார்கள் மற்றும் ஒரு எர்த் மூவர் ஆகிய இயந்திரங்களுடன், நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் போக்குவரத்து இருக்கும் இந்த வழித்தடத்தில், சில ரயில்கள் தடம் மாற்றிவிடப்பட்டு, இரவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பணிகள் முடிவடைந்ததும், மெஜஸ்டிக்கில் இருந்து ராஜாஜி நகர் நோக்கிச் செல்லும் போக்குவரத்தும், மெஜஸ்டிக்கில் இருந்து நேரடியாக ஸ்டேஷனின் பின்புற நுழைவாயிலுக்குச் செல்லும் போக்குவரத்தும் சீராக இருக்கும்என்று நம்பப்படுகிறது.

இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, ரயில்கள் நிறுத்தப்பட வேண்டியிருப்பதால் இது சவால் மிக்க பணியாக உள்ளது. ரயில் இயக்கம் குறைவாக இருக்கும் இரவு நேரங்களில் மட்டுமே வேலை செய்வது என்பது சிரமமானது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க: இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News