விமானத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை; மீறினால் 2 வாரம் தடை: மத்திய அரசு

விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை. விதிமீறல் செயல்களில் ஈடுபட்டால் 2 வாரம் அந்த விமானத்தை இயக்க தடை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2020, 06:34 PM IST
  • விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை.
  • விதிமீறல் செயல்களில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வழித்தடத்தில் 2 வாரம் அந்த விமானத்தை இயக்க தடை
  • விமானம் தேவையான அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் எடுத்த பின்னரே விமான பறக்க அனுமதிகப்படும்
விமானத்தில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை; மீறினால்  2 வாரம் தடை: மத்திய அரசு title=

மும்பை: ஒரு விமானத்தில் பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால், அந்த குறிப்பிட்ட விமானத்தின் செயல்பாட்டை அடுத்த நாளிலிருந்து இரண்டு வார காலத்திற்கு தடை செய்யப்படும் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (Directorate General of Civil Aviation) எச்சரித்துள்ளது. 

நடிகை கங்கனா ரனாவுத்தை (Kangana Ranaut) சுற்றி கேமராக்கள் கூட்டத்துடன் ஊடகளாவியர்கள் இருந்த ஒரு வீடியோ காட்சி சனிக்கிழமையன்று வெளியானதை அடுத்து,  இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் சண்டிகர் முதல் மும்பை வரை பயணித்த இண்டிகோ விமானத்தில் ஊடகங்கள் செய்தி சேகரிக்க விமானத்தில் கேமராக்களுடன் எந்தவித கொரோனா வழிக்காட்டுதலையும் பின்பற்றாமல், கூட்டமாகவும், மற்ற பயணிகளுக்கு இடையூறாகவும் இருந்தனர். 

"விமான விதிகள் 1937 இன் விதி 13 ன் படி (Aircraft rules 1937 Rule 13), எந்தவொரு நபரும் அரசாங்க ஏரோட்ரோமில் (Government Aerodrome) அல்லது விமானத்தில் இருந்து எந்த புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கவோ கூடாது" என்று டி.ஜி.சி.ஏ. துணை இயக்குநர் ஜெனரல் சுனில் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ |  விமான பயணிகளுக்கு Good news, அரசாங்கத்தின் இந்த முடிவால் இனி எளிதாக விமானங்கள் கிடைக்கும்

புகைப்படம் எடுப்பதற்கான நிபந்தனைகளை விமான நிறுவனங்கள் (Airlines) பின்பற்றத் தவறிவிட்டன. இதன்மூலம் பாதுகாப்பின் தரத்தை பராமரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அனுமதிக்கப்படக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ |  ஊரடங்கால் மோசமான நிலையில் இந்த airlines...கலங்கி போன ஊழியர்கள்

"இனிமேல், ஏதேனும் திட்டமிடப்பட்ட பயணிகள் விமானத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட பாதைக்கான விமான அட்டவணை அடுத்த நாளிலிருந்து இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்தப்படும், அதாவது மீறலுக்கு காரணமானவர்கள் மீது விமானம் தேவையான அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் எடுத்த பின்னரே விமான பறக்க அனுமதிகப்படும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ புகைப்படம், வீடியோ எடுக்க தடை. இனிமேல் விமானத்தில் பயணிகள் விதிமீறல் செயல்களில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வழித்தடத்தில் 2 வாரம் அந்த விமானத்தை இயக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

No description available.

Trending News