ரேஷன் கார்டு ரத்து: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, அரசிடம் இருந்து இலவச ரேஷன் பெற்று வந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், ரேஷன் கார்டுதாரர்களின் ஒரு சிறிய தவறு காரணமாக, 80 ஆயிரம் ரேஷன் கார்டுகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்மையில், ஒரு ரேஷன் கார்டுதாரர் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து ரேஷன் எடுக்கவில்லை என்றால், அவரது பெயர் பட்டியலில் இருந்து அரசாங்கத்தால் நீக்கப்படும் என்பது அரசாங்கத்தின் புதிய விதியாகும். மேலும் அதற்கு பதிலாக, மற்றொரு ஏழை குடும்பத்துக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்.
ஆறு மாதங்களாக ரேஷன் எடுக்காமால் போனால் என்னாகும்?
இந்த நிலையில் தொடர்ந்து ஆறு மாதங்களாக ரேஷன் எடுக்காதவர்களின் ரேஷன் கார்டை தற்போது கோவா அரசு ரத்து செய்துள்ளது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 2022 முதல் ஜனவரி 2023 வரை ரேஷன் எடுக்காதவர்கள் ஆவார்கள். இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகார இயக்குநர் கோபால் பர்சேகர் கூறியதாவது., ரேஷன் எடுக்காத கார்டுதாரர்களின் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. இதனுடன், கார்டுதாரர்கள் ஏன் ரேஷன் எடுக்கவில்லை என்பது குறித்தும் ரேஷன் துறை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | புதிய எஃப்டி திட்டத்தை அறிமுகம் செய்தது SBI: இதில் கிடைக்கும் அதிக வட்டி
கோவா மாநிலத்தில் சுமார் 13.32 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 80 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் எடுக்காதது பெரிய விஷயம். இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் ஏன் ரேஷன் எடுக்கவில்லை என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082
மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ