அரசாங்கம் அனுமதித்தால், இந்தியா முழுவதும் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை ரூ.35 முதல் ரூ.45 வரை வழங்கத் தயாராக உள்ளதாக பாபா ராம்தேவ் அறிவிப்பு...!
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும், டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.82.06 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.73.78 காசுகளாகவும், மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.89.44 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.33 காசுகளாகவும் விற்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டில்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாபா ராம்தேவ் கூறுகையில், ஆங்கில ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், `கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்குப் பின்னணியில் சில முக்கிய காரணிகள் உள்ளன.
வாகன ஓட்டிகளின் சுமைகளைக் குறைக்கவும், அரசாங்கம் அனுமதித்தால் சரக்கு மற்றும் சேவை வரியில் சலுகை வழங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை 35 முதல் 45 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடியும்' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க-வுக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்தவர். அரசு சார்பில் சுழல்விளக்கு பொருத்தப்பட்ட கார், பாதுகாப்பாளர்கள், பாதுகாப்பு வாகனங்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....!